Home மாவட்டங்கள் பெங்களூர் டாக்டர் பா. சு. மணி நூலகத்தில் கோடை முகாமில் சிறுப்பிள்ளைகள் உற்சாகம்

டாக்டர் பா. சு. மணி நூலகத்தில் கோடை முகாமில் சிறுப்பிள்ளைகள் உற்சாகம்

பெங்களூரு: ஏப்ரல் 22-
பெங்களூருவில் பா. சு. மணி நூலகத்தில் சிறுப்பிள்ளைகள் பங்கேற்கும் கோடை முகாமில் உற்சாகமாக விளையாடி மகிழ்கின்றனர்.
கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் பா. சு. மணி நூலகம் இணைந்து சிறுப்பிள்ளைகளுக்கு தமிழ், தமிழ் பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மரபு விளையாட்டுகள் சொல்லி கொடுக்கும் தமிழ் பண்பாட்டு கோடை முகாம், பெங்களூரு குயின்ஸ் சாலை, தினச்சுடர் அலுவலகம் வளாகத்தில் உள்ள நூலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு தமிழ் மரபு விளையாட்டுகளை இமாக்குலெட் சொல்லி கொடுத்து வருகிறார். சிறுவர்கள் ஆர்வமுடன் பழங்கால தமிழ் மரபு விளையாட்டுகளை ஆர்வமுடன் விளையாடி மகிழ்கின்றனர். பம்பரம் சுற்றுதல், பல்லாங்குழி, பாம்பு-ஏணி, தாயம் உள்ளிட்ட இந்த கால சிறுவர்களுக்கு தெரியாத, பார்க்காத விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றனர்.
அதனுடன் பழங்கால நீதி கதைகள் சொல்லி அதன் அர்த்தத்தை சொல்லி கொடுப்பதை செவி கொடுத்து கேட்கிறார்கள். கதையும், அதற்கான விளக்கமும் சிறுவர்களை கவர்ந்து வருகிறது. அடுத்த வாரம் தமிழ் மரபு நடனம், நாட்டியம், நாடகம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான நிகழ்வு கள் சொல்லி கொடுக்க படுகிறது.
மேலும் சிறுவர்கள் அதிகம் நேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் தீமை என்ன? அதிலிருந்து விடுப்பட என்ன செய்ய வேண்டும். சமயம் கிடைக்கும் போது, ஓவியம் வரைய வேண்டும், புத்தகங்கள் படிக்க வேண்டும், யோகாசனம் உள்ளிட்ட உடல் பயிற்சி செய்ய வேண்டும், அதிகமாக விளையாட்டுகளில் கவனம் செலுத்த வேண்டும், பெரியவர் களுடன் அதிகநேரம் பேச வேண்டும், முத்த வர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல நற்பண்புகள் முகாமில் சொல்லி கொடுக்கப்படுகிறது.