வாஷிங்டன், செப். 26- அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் டிக்டாக் நிறுவனம் இயங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்து விட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த ‘பைட்டான்ஸ்’ என்ற நிறுவனத்தின், ‘டிக்டாக்’ செயலியை, கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இசை, நடன வீடியோக்களை போடும் இந்த தளத்தின் பயனர்களின் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த தகவல்களை சீன அரசு பயன்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக,
டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க வர்த்தகத்தை விற்பனை செய்யும்படி, ‘பைட்டான்ஸ்’ நிறுவனத்துக்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வந்தார். இல்லையெனில் டிசம்பரில் தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க – சீன அதிபர்கள் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் டிக்டாக் நிறுவனம் இயங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் சீன அதிபர் கையெழுத்து விட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.




















