நியூயார்க், ஆகஸ்ட் 20- இந்தியா-சீனா உறவு நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது. இரண்டு நாடுகளும் கசப்புகளை மறந்து இணக்கமாகி வருகிறது. இதன் ஒரு கட்டமாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். தியான்ஜினில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை வாங் யி, மோடியிடம் வழங்கினார். 2020ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு, ராணுவ மற்றும் ராஜதந்திர விவாதங்களை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அதோடு டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் இந்தியா – சீனா நெருக்கமாகி உள்ளது.
















