அமெரிக்காவில் வசித்த 73 வயது சீக்கிய பெண் நாடு கடத்தல்

வாஷிங்டன், செப். 26- அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பஞ்சாப்பை சேர்ந்த 73 வயது நிரம்பிய மூதாட்டியை அங்குள்ள அதிகாரிகள் நாடு கடத்தி உள்ளனர். மூதாட்டி என்று கூட பாராமல் அவரது கையில் கைவிலங்கு மாட்டி கடைசியாக குடும்பத்தினரிடம் கூட குட்பை’ சொல்ல விடாமல் தடுத்து நாடு கடத்திய சம்பவம் கலங்க வைத்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதுமே சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதாக அறிவித்தார். அதன்படி ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ராணுவ விமானத்தில் கையில் கைவிலங்கு போட்டு அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். மேலும் இந்த நடவடிக்கையை டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அதிகாரிகள் மூலமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் நாடு கடத்தும் விஷயத்தில் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் 73 வயது நிரம்பிய சீக்கிய பெண்ணிடம் அடாவடியாக நடந்து கொண்டதும், கடைசியாக குடும்பத்தினரை கூட சந்திக்க விடாமல் நாடு கடத்தி உள்ளனர். அதாவது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ஜித் கவுர் (வயது 73). சீக்கியர். இவரது கணவர் தவறிவிட்டார். 2 மகன்களுடன் பஞ்சாப்பில் வசித்தார். அதன்பிறகு 1992ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார். வடக்கு கலிபோர்னியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். உள்ள இந்திய துணிக்கடையில் அவர் வேலை செய்து வந்தார்.
இப்போது 2 மகன்களுக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. 2 பேரன்கள், 3 பேத்திகளுடன் ஹர்ஜித் கவுர் அமெரிக்காவில் மகிழ்ச்சியாக வசித்து வந்தார். ஹர்ஜித் கவுரிடம் அமெரிக்கா செல்வதற்கான உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்கா சென்றதாக கூறப்படுகிறது.