Home விளையாட்டு “அமை​தி​யாக​வும், தெளிவாகவும் இருக்கிறோம்” – ஆர்​சிபி ஆல்ரவுண்டர் கிருணல் பாண்டியா

“அமை​தி​யாக​வும், தெளிவாகவும் இருக்கிறோம்” – ஆர்​சிபி ஆல்ரவுண்டர் கிருணல் பாண்டியா

பெங்​களூரு, ஏப்ரல் 1- ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி தனது முதல் ஆட்​டத்​தில் முன்​னாள் சாம்​பிய​னான சன்​ரைசர்ஸ் ஹைதர​பாத் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்து நடப்பு சீசனை வெற்​றிகர​மாக தொடங்கியிருந்​தது. அந்த அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 5-ம் தேதி சிஎஸ்கே அணி​யுடன் மோத உள்​ளது. இந்​நிலை​யில் ஆர்​சிபி அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான கிருணல் பாண்​டியா கூறிய​தாவது: இந்த ஆண்டு அணி​யில் அதிக அமை​தி​யான சூழல் இருப்​ப​தாக நான் உணர்​கிறேன். கடந்த ஆண்டு இது ஒரு புதிய அணி​யாக இருந்​தது. மேலும் அனை​வரும் ஒரு​வரைப் பற்றி ஒரு​வர் தெரிந்​து​கொள்ள வேண்​டி​யிருந்​தது. இந்த ஆண்டு பல வீரர்​கள் தங்​களது பொறுப்​பு​களை​யும் மற்​றும் தங்​களின் பலம், பலவீனங்​களை​யும் நன்​றாகப் புரிந்​து​கொண்​டுள்​ளனர் போட்​டி​யின் போது பெரிய தருணங்​களை நான் எதிர்​கொள்​ளும்​போது, கடவுள் நம்மை இங்கு கொண்டு வந்​திருக்​கிறார் என்​றால் அதற்குப் பின்​னால் ஒரு காரணம் இருக்​கும் என்று நம்புவேன். சில நேரங்​களில் இந்த பெரிய தருணங்​கள் எனக்​காகவே உரு​வாக்​கப்​பட்​டவை என்று நான் நினைப்​பதுண்​டு. நான் அழுத்​தத்தை உணர்​கிறேன், ஆனால் அந்த தருணத்​தில் நான் எப்​படி அமை​தி​யாக​வும், கவன​மாக​வும் இருந்து அணிக்கு என்ன தேவை, அதை எப்​படி செய்ய முடி​யும் என்​ப​தைப் பற்றி மட்​டுமே சிந்​திப்​பேன். இவ்​வாறு அவர் கூறினார்.