டெல்லி: செப். 12-
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கும் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சலுகைகளை உயர்த்தி வழங்குவதற்கான பரிந்துரைகளை அளிக்க சம்பள கமிஷன் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 7வது சம்பள கமிஷன் 10 ஆண்டுக்கு முன்பு அமைக்கப்பட்டது, அதன்படியே 2016ம் ஆண்டு முதல் சம்பளம் உயர்த்தப்பட்டது. இப்போது 10 ஆண்டு நெருங்கிவிட்ட நிலையில், 8-வது சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான அறிவிப்பு இதுவரை மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை. ஆனால் எந்த நேரத்திலும், அரசிதழில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. என்ன தான் ஐடி வேலையில் லட்சங்களில் சம்பளம் தந்தாலும், மத்திய அரசு மற்றும் மாநில அரசு வேலைகளில் சேருவதற்கு உள்ள கிராக்கி இன்று வரை குறையவே இல்லை.. ஏனெனில் ஐடி துறையில் சம்பளம் அதிகம் என்றாலும், வேலைக்கு உத்தரவாதம் கிடையாது.















