அரை இறுதியில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா

புதுடெல்லி, மார்ச் 2- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் நேற்று டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் தென் ஆப்பிரிக்கா – ஜிம்​பாப்வே அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்​பாப்வே அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 153 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் சிகந்​தர் ராசா 43 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 73 ரன்​கள் விளாசி​னார். கிளைவ் மடாண்டே 26, பிரையன் பென்​னட் 15, டியோன் மையர்ஸ் 11 ரன்​கள் சேர்த்​தனர். தென் ஆப்​பிரிக்க அணி தரப்​பில் க்வெனா மாபா​கா, கார்​பின் போஷ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 154 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 17.5 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக் 154 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. டெவால்ட் பிரே​விஸ் 18 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 42 ரன்​கள் விளாசி​னார். டேவிட் மில்​லர் 16 பந்​துகளில், 2 பவுண்​டரி​கள், 2 சிக்​ஸர்​களு​டன் 22 ரன்​களும், ரியான் ரிக்​கெல்​டன் 22 பந்​துகளில், 4 சிக்​ஸர்​களு​டன் 31 ரன்​களும் சேர்த்​தனர். டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 24 பந்​துகளில், 21 ரன்​களும் ஜார்ஜ் லின்டே 21 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 30 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். முன்​ன​தாக கேப்​டன் எய்​டன் மார்க்​ரம் 4, குயிண்​டன் டி காக் 0 ரன்​களில் வெளி​யேறி இருந்​தனர். ஜிம்​பாப்வே அணி சார்​பில் சிகந்​தர் ராசா 3 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிரிக்க அணி சூப்​பர் 8 சுற்​றில் இது ஹாட்​ரிக் வெற்​றி​யாக அமைந்​தது. லீக் சுற்​றி​லும் தோல்​வியை சந்​திக்​காத தென் ஆப்​பிரிக்க அணி தற்​போது சூப்​பர் 8 சுற்​றி​லும் வீழ்த்த முடி​யாத அணி​யாக திகழ்ந்து அரை இறு​தி​யில் நுழைகிறது.