ரஷ்யா, டிச.4-
ரஷ்யாவை சேர்ந்த நடிகை கமிலா பெலியாட்ஸ்காயா (24), விடுமுறையை கொண்டாட தனது ஆண் நண்பருடன் தாய்லாந்து சென்றிருந்தார். அங்கு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கோ ஸமுய் கடற்கரைக்குச் சென்ற அவர் அங்குள்ள பாறை பகுதியில் யோகா செய்துகொண்டிருந்தார். அதை வீடியோவும் எடுத்தார். அப்போது, திடீரென வந்த ராட்சத அலை அவரை இழுத்துக்கொண்டு சென்றது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.