ஆந்திராவில் மேலும் ஒரு பஸ் விபத்து

அமராவதி, நவ. 6- ஆந்திராவின் மேலும் ஒரு பேருந்து தீப்பற்றியுள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு ஒடிசா மாநில ஆர்டிசி பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று காலை 7.45 மணிக்கு ஆந்திராவில் உள்ள பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் பச்சிபெண்டா மண்டலத்தில் உள்ள மலை பாதை வழியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தில் தீ பற்றிய எரிய தொடங்கிய நிலையில், உடனடியாக டிரைவர் உடனடியாக பணியணிகளை எச்சரிக்கையை சேர்ந்து பேருந்தை சாலை ஓரம் நிறுத்தியதால் அனைத்து பயணிகளும் கீழே இறங்கினர். சில நிமிடங்கள் இடையே இந்த தீ விபத்தி பேருந்து முழுவதும் பற்றி எரிய தொடங்கிய நிலையில், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பேருந்து முற்றிலும் தீ விபத்தில் எரிந்து சேதம் அடைந்துள்ளது. ஆனால் பயணிகள் யாருக்கும் உயிர் சேதமும், காயமும் ஏற்படாததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.