ஆந்திராவில் வைர வேட்டையில் இறங்கிய கிராம மக்கள்

சென்னை: ஆகஸ்ட் 26-
ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமாவில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லூர் வைர சுரங்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டு விட்டது. இந்நிலையில் வைரக் கண்டுபிடிப்புகளுக்கு நீண்ட காலமாகப் பெயர் பெற்ற ஜோனகிரி, துக்கலி மற்றும் பெரவலி மண்டலங்களில் உள்ள கிராம மக்கள் வைர வேட்டையில் இறங்கி உள்ளன. ஆந்திராவில் ராயலசீமா பகுதியில் பருவமழை பெய்துள்ளதால் வைர வேட்டைக்கு மக்கள் தயாராகி உள்ளனர். பலரை லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாற்றி உள்ளதால் தேடுவது அதிகரித்துள்ளது. ஆந்திராவில் ஒவ்வொரு முறை மழை காலம் ஆரம்பிக்கும் போது கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களில் மக்கள் வைர வேட்டையில் இறங்குவார். இதன்பின்னணி பற்றி பார்ப்போம். ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமா என்று அழைக்கப்படும் கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லூர் வைர சுரங்கம் ஒரு காலத்தல் இருந்தது. இந்த சுரங்கம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுவிட்டது. ஆனாலும் பொதுமக்களின் கைகளில் அதிர்ஷ்டவசமாக வைரங்கள் சிக்குவது தொடர்கதையாக இருக்கிறது .தங்கம் எப்படி மக்களை கோடீஸ்வரன் ஆக்குகிறததோ, அதுபோல் வைரமும் மக்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தருகிறது.