ஆப்கானிஸ்தான் நிலநடுக்க பலி 600 ஆக உயர்வு

காபூல்: செப். 1-
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 600 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. நகங்கர் மாகாணாம் ஜலலாபாத்தை மையமாக கொண்டு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலி 6 ஆகவும், அடுத்த நிலநடுக்கம் 4.5 ஆகவும் பதிவானது. கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் இன்று அடுத்தடுத்து இரு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நகங்கர் மாகாணாம் ஜலலாபாத்தை மையமாக கொண்டு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆகவும், அடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் 4.5 ஆகவும் பதிவானது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் பலர் சிக்கினர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை 600 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.