ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து

புதுடெல்லி, ஆகஸ்ட் 29- டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் பேசி​ய​தாவது: மக்​கள் தொகை பெருக்​கம் என்​பது ஒரு​புறம் சொத்து ஆகவும் மறு​புறம் சுமை​யாக​வும் கருதப்​படு​கிறது. என்​னைப் பொறுத்​தவரை ஒவ்​வொரு பெற்​றோரும் 3 குழந்​தைகளை பெற்​றுக் கொள்ள வேண்​டும். தேசிய அளவில் இந்து குடும்​பங்​களில் குழந்​தைபேறு சதவீதம் குறைந்து வரு​கிறது. அதே​நேரம் இதர சமு​தா​யங்​களில் குழந்தை பிறப்பு சதவீதம் கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. மதமாற்​றம் காரண​மாக இந்​துகளின் எண்​ணிக்கை குறைந்து வரு​கிறது. மதமாற்​றத்தை அனு​ம​திக்​கக்​கூ​டாது. மத்​திய அரசின் அனைத்து விவ​காரங்​களி​லும் ஆர்​எஸ்​எஸ் அமைப்பே முடிவு எடுக்​கிறது என்​பது மிக​வும் தவறான கருத்து ஆகும். நாங்​கள் அறி​வுரைகளை மட்​டுமே வழங்​கு​கிறோம். அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று நான் ஒருபோதும் கூற வில்லை. அந்த வயதில் ஓய்வு பெறுவது கட்டாயமில்லை. 80 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பை வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தினால், நிச்சயம் ஏற்றுக் கொள்வேன். ஆர்எஸ்எஸ்என்ன சொன்னாலும் செய்வேன். இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.