
சென்னை: பிப்ரவரி 18-
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாக்களை அமைச்சர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஜன.20-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறினார். ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு நிலவும் இந்த பரபரப்பான சூழ லில் தேர்தல் வரவுள்ளது.
இந்நிலையில், ஆர்.என்.ரவி நேற்று விமானம் மூலம் 3 நாள் பயணமாக டெல்லி சென்றார். 19-ம் தேதி சென்னை திரும்பவுள்ளார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.















