ஆஸ்​திரேலி​யா​வுடன் முதல் டி 20-ல் இன்று மோதல்:

கான்​பெரா, அக். 29- இந்​தியா – ஆஸ்​திரேலியா அணிகள் கான்​பெ​ரா​வில் உள்ள மனுகா ஓவல் மைதானத்​தில் இன்று பிற்​கல் 1.45 மணிக்கு முதல் டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் மோதுகின்​றன. இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரை ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய அணி 1-2 என இழந்​தது. இந்​நிலை​யில் இரு அணி​களும் 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் மோத உள்​ளன. இதன் முதல் ஆட்​டம் இன்று பிற்​பகல் 1.45 மணிக்கு கான்​பெ​ரா​வில் நடை​பெறுகிறது. இந்​திய அணி சூர்​யகு​மார் யாதவ் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. அவரது தலை​மை​யில் இந்​திய அணி அச்​சமற்ற கிரிக்​கெட்டை விளை​யாடி வரு​கிறது. முதல் பந்​தில் இருந்தே அனைத்து பேட்​ஸ்​மேன்​களும் அதிரடி​யாக விளை​யாடும் திறனை வளர்த்​துக் கொண்​டுள்​ளனர். இதன் பலனாக சூர்​யகு​மார் யாதவ் கேப்​டன்​ஷிப்​பில் இந்​திய அணி 29 ஆட்​டங்​களில் 23 வெற்​றிகளை குவித்​துள்​ளது.சூர்​யகு​மார் யாதவ் தலை​மை​யில் இந்​திய அணி இது​வரை இருதரப்பு டி 20 தொடரை இழந்​தது இல்​லை. கடைசி​யாக இந்​திய அணி ஆசிய கோப்பை டி 20 தொடரில் பட்​டம் வென்​றிருந்​தது. அந்​தத் தொடரில் இந்​திய அணி ஒரு ஆட்​டத்​தில் கூட தோல்​வியை சந்​திக்​க​வில்​லை. அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் டி 20 உலகக் கோப்பை தொடர் நடை​பெற உள்​ளது. இந்த இடைப்​பட்ட காலத்​தில் இந்​திய அணி 15, டி 20 ஆட்​டங்​களில் விளை​யாட உள்​ளது. இதன் தொடக்​க​மாக தற்​போது ஆஸ்​திரேலி​யத் தொடர் அமைந்​துள்​ளது. இந்​தத் தொடர் டி 20 உலகக் கோப்​பைக்கு சிறந்த முறை​யில் தயா​ராகு​வதற்​கான சவாலை இந்​திய அணிக்கு கொடுக்​கக்​கூடும். எனினும் நடப்பு ஆண்​டில் சூர்​யகு​மார் யாத​வின் பேட்​டிங்​கில் பெரிய அளவில் தேக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. 2023-ம் ஆண்டு 18 இன்​னிங்​ஸ்​களில் விளை​யாடி 156 ஸ்ட்​ரைக் ரேட்​டுடன் 733 ரன்​களை குவித்து மிரட்​டி​யிருந்​தார் சூர்​யகு​மார் யாதவ். இதில் 2 சதங்​கள், 5 அரை சதங்​கள் அடங்​கும். தொடர்ந்து 2024-ம் ஆண்டு 151 ஸ்ட்​ரைக் ரேட்​டுடன் 450 ரன்​கள் சேர்த்​தார். ஆனால் நடப்​பாண்​டில் 10 இன்​னிங்​ஸ்​களில் விளை​யாடி 100 ரன்​கள் மட்​டுமே சேர்த்​துள்​ளார். சராசரி வெறும் 11 ஆக மட்​டுமே இருக்​கிறது. எனினும் சூர்​யகு​மார் யாத​வின் ஸ்ட்​ரைக் ரேட் 105-க்கு மேல் உள்​ளது. இது அவர் ரன்​களுக்​காகப் போராடிய போதி​லும், தனது தாக்​குதல் நோக்​கத்தை முற்​றி​லு​மாக கைவிட​வில்லை என்​ப​தையே உணர்த்​துகிறது. ஆசி​யக் கோப்பை தொடரில் அதிரடி​யாக விளை​யாடி ரன்​வேட்டை நிகழ்த்​திய தொடக்க வீர​ரான அபிஷேக் சர்​மாவுக்​கு, ஆஸ்​திரேலிய ஆடு​களங்​களில் காணப்​படும் கூடு​தல் பவுன்ஸை சமாளிப்​பது சவாலாக இருக்​கக்​கூடும் என கருதப்​படு​கிறது.