
மும்பை, பிப். 19- சிவசேனா (உத்தவ்) கட்சியின் அதிகாரப்பூர்வ ‘சாம்னா’ நாளிதழில் ஒரு தலையங்கம் வெளியாகியுள்ளது. அதில், “காங்கிரஸ் மற்றும் தேசத்தின் உச்ச தலைவராக மகாத்மா காந்தி இருந்தார். காந்திக்கு ஒரு உள் குரல் இருந்தது. அது, அவரது முடிவுகளை வழி நடத்தியது. ஆன்மீகம், தேச பக்தி மற்றும் தன்னலமின்மையால் அம்முடிவுகள் கூர்மைப்படுத்தப்பட்டன.
இன்று, காங்கிரஸுக்குள் பல ‘உள் குரல்கள்’ உருவாகி குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இது நாட்டுக்கு ஆரோக்கியமானது அல்ல. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த உள் குரல்கள் குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளன. மணி சங்கர் அய்யர், சஞ்சய் பாரு உள்ளிட்டோரின் கருத்துகள் சிரமமான நேரத்தில் வெளிவந்து, காங்கிரஸ் விவகாரங்களை சிக்கலாக்குகின்றன” என கூறப்பட்டுள்ளது.
















