“இந்தியாவுக்கு எதிரான வரலாற்று வெற்றி ” – நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செல்

இந்தூர், ஜன. 20- இந்​திய அணிக்கு எதி​ரான ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது பெருமை அளிப்​ப​தாக நியூஸிலாந்து கிரிக்கெட் அணி​யின் பேட்​ஸ்​மே​னான டேரில் மிட்செல் தெரி​வித்​துள்​ளார். இந்​தியா – நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரின் கடைசி ஆட்​டம் நேற்று முன்​தினம் இந்​தூரில் நடை​பெற்​றது. இதில் 338 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்திய அணி 41 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்தது. விராட் கோலி (124), ஹர்​ஷித் ராணா (52) ஆகியோர் வெற்​றிக்​காக போராடினர். ஆனால் இவர்​கள் ஆட்​ட​மிழந்​ததும் இந்​திய அணி​யின் தோல்வி தவிர்க்க முடியாத​தாக மாறியது. 4 ஓவர்​கள் முழு​மை​யாக மீதம் இருந்​தும் இந்​திய அணி தோல்​வியை தழு​வியது பல்​வேறு விமர்​சனங்​களுக்கு வழி​வகுத்​தது. இது ஒரு​புறம் இருக்க இந்த வெற்​றி​யின் மூலம் நியூஸிலாந்து அணி ஒரு​நாள் போட்​டித் தொடரை 2-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. இதன் மூலம் அந்த அணி இந்​திய மண்ணில் முதன்​முறை​யாக ஒரு​நாள் தொடரை கைப்​பற்றி வரலாற்று சாதனை படைத்​தது. நியூஸிலாந்து அணி​யின் வெற்​றி​யில் டேரில் மிட்​செல் முக்கிய பங்கு வகித்​திருந்​தார். பேட்​டிங்​கில் அவர், 137 ரன்களை விளாசி​யிருந்​தார். மேலும் கிளென் பிலிப்​ஸுடன் (106) இணைந்து 4-வது விக்​கெட்​டுக்கு 219 ரன்​கள் குவித்து இந்​திய அணிக்கு அழுத்​தம் கொடுத்​திருந்​தார். 2-வது ஒரு​நாள் போட்​டி​யிலும் டேரில் மிட்​செல் சதம் விளாசி அணி​யின் வெற்​றிக்கு உதவி​யிருந்​தார். ஒட்டுமொத்​த​மாக இந்​தத் தொடரில் 2 சதங்​கள், ஒரு அரை சதத்​துடன் 352 ரன்​கள் குவித்த அவர், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்​றார். வெற்​றிக்கு பின்​னர் டேரில் மிட்​செல் கூறிய​தாவது: விராட் கோலி மற்​றும் ஹர்​ஷித் ராணா நன்​றாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளை​யாடி​னார்​கள். மேலும் ஆடு​களத்​தின் தன்மை மற்​றும் அளவு எங்​களுக்கு மிகுந்த அழுத்​தத்தை ஏற்​படுத்​தி​யது. நியூஸிலாந்து அணியை நினைத்து நான் மிக​வும் பெரு​மைப்​படு​கிறேன். அழுத்தமான சூழலிலும் அமை​தி​யாக செயல்​பட்டு எங்களது திட்​டங்​களை சரி​யாக செயல்​படுத்​தினோம். கடைசிப் போட்​டி​யில் விளை​யாடிய விதம் குறித்து இரண்டு அணி​களுமே மிகுந்த பெரு​மையடைய வேண்டும் என நினைக்​கிறேன்.