இந்தியாவுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளார் டிரம்ப்

வாஷிங்டன், ஆகஸ்ட் 5- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ‘செயலற்ற பொருளாதாரங்களான இந்தியாவும், ரஷ்யாவும் ஒன்று சேர்ந்து மூழ்கப்போகின்றன’ என சமீபத்தில் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.50 சதவீதமாகவும், ரஷ்ய பொருளாதாரம் 1 சதவீதமும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிக்கையோ, உலகப் பொருளாதாரம் குறித்த தவறான புரிதல் கொண்டுள்ளதை காட்டுகிறது.அதே சமயம் அமெரிக்காவின் வரி விதிப்பு உலகளவில் முழுதுமாக அமலுக்கு வரும்போது,
அமெரிக்காவின் பொருளாதாரம் சில ஆண்டுகளில் 0.8 சதவீதம் சுருங்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் வளர்ச்சி தற்போது, 1.30 சதவீதமாக குறைந்து உள்ளது. மேலும், அந்நாட்டின் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. ‘டிரம்பனாமிக்ஸ்’ என அழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு கொள்கை, அமெரிக்க பொருளாதாரத்திற்கு இன்னமும் நேர்மறையான முடிவுகளை காட்டவில்லை.