இந்தியா சரணடையும் -அமெரிக்க வர்த்தக செயலாளர் திமிர் பேச்சு

வாஷிங்டன்: செப்டம்பர் 6 அமெரிக்காவின் 50 சதவீத வரியால் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா இன்னும் 2 மாதங்களில் மன்னிப்பு கேட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வரும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பரும், அமெரிக்க வர்த்தக செயலாளருமான ஹோவர்ட் லுட்னிக் திமிராக பேசி உள்ளார் நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் மோடி மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இடையே இருந்த நட்பில் கீறல் விழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் டிரம்ப் தான். நம் நாட்டின் மீது டொனால்ட் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி தான் இந்த பிரச்சனைகளுக்கு மெயின் காரணம். இந்த வரியால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்கா நமக்கு விசுவாசமாக இருக்கும் என்று நம் நாடு நினைத்தது. ஆனால் டிரம்ப் முதுகில் குத்திவிட்டார். இதனால் அமெரிக்கா மீதான நம்பிக்கையை பிரதமர் மோடி இழந்துவிட்டார். அமெரிக்காவின் வர்த்தக சரிவை மீட்டெடுக்க பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவுடன் நம் நாடு கைகோர்த்துள்ளது. இது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எண்ணவில்லை. மேலும் சில நாட்களுக்கு முன்பு சீனா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் தனித்தனியாக பேசியது. 3 பேரும் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோ உள்ளிட்டவற்றால் பிரதமர் மோடியின் அடிவயிறு கலங்கிப்போய் உள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக 3 நாடுகளும் ஏதாவது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவர் உள்ளார்.