இந்திய அணிக்கு திரும்பினார் ஜஸ்பிரீத் பும்ரா

து​பாய், செப். 26- மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ரான டெஸ்ட் தொடருக்​கான இந்​திய அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் வேகப்​பந்து வீச்​சாளர் ஜஸ்​பிரீத் பும்ரா அணிக்கு திரும்பி உள்​ளார். அதேவேளை​யில் கருண் நாயர், அபிமன்யு ஈஸ்​வரன் நீக்​கப்​பட்​டுள்​ளனர். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி அடுத்​த​வாரம் இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்​ளது. இதன் முதல் ஆட்​டம் வரும் அக்​டோபர் 2 முதல் 6-ம் தேதி வரை அகம​தா​பாத்​தில் தொடங்​கு​கிறது. 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி அக்​டோபர் 10 முதல் 14-ம் தேதி வரை டெல்​லி​யில் நடை​பெறுகிறது.இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான 15 பேர் கொண்ட இந்​திய அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. துபா​யில் நேற்று இதனை இந்​திய தேர்​வுக்​குழு தலை​வர் அஜித் அகர்​கர் அறி​வித்​தார். இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான கடைசி டெஸ்ட் போட்​டி​யில் ஓய்வு கொடுக்​கப்​பட்​டிருந்த வேகப்​பந்து வீச்​சாளர் ஜஸ்​பிரீத் பும்ரா அணிக்கு திரும்பி உள்​ளார். பும்​ரா​வுக்கு போது​மான அளவு ஓய்வு வழங்​கப்​பட்​டுள்​ள​தால் மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதி​ரான 2 டெஸ்ட் போட்​டி​யிலும் விளை​யாடு​வார் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதேவேளை​யில் இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தில் பேட்​டிங்​கில் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​தாத கருண் நாயர் நீக்​கப்​பட்​டுள்​ளார். அவர், 8 இன்​னிங்​ஸில் 205 ரன்​கள் மட்​டுமே சேர்த்​திருந்​தார். இந்த சுற்​றுப்​பயணத்​தில் ஒரு முறை கூட களமிறங்க வாய்ப்பு கிடைக்​காத மேற்கு வங்க பேட்​ஸ்​மேன் அபிமன்யு ஈஸ்​வரனும் நீக்​கப்​பட்​டுள்​ளார். கருண் நாயருக்கு பதிலாக கர்​நாட​காவை சேர்ந்த 25 வயதான இடது கை பேட்​ஸ்​மே​னான தேவ்​தத் படிக்​கல் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். மேலும் தமிழகத்தை சேர்ந்த இடது கை பேட்​ஸ்​மே​னான சாய் சுதர்​சனுக்கு மீண்​டும் வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தில் சாய் சுதர்​சன் 6 இன்​னிங்​ஸில் 140 ரன்​கள் மட்​டுமே சேர்த்​திருந்​தார். விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மேனும் துணை கேப்​ட​னு​மான ரிஷப் பந்த் காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடை​யாத​தால் துணை கேப்​ட​னாக ரவீந்திர ஜடேஜா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மேன்​களாக துருவ் ஜூரெல், நாராயண் ஜெகதீசன் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். இங்​கிலாந்து சுற்​றுப்​பயணத்​தில் காயம் காரண​மாக பாதி​யில் வில​கி​யிருந்த ஆல்​ர​வுண்​டர் நித்​திஷ் குமார் ரெட்டி காயத்​தில் இருந்து குணமடைந்​ததை தொடர்ந்து மீண்​டும் அணி​யில் இடம் பெற்​றுள்​ளார்