இந்திய அணி நாளை அறிவிப்பு

மும்பை, டிச. 19- வரும் 2026 டி20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சனிக்கிழமை டிசம்பர் 20 அன்று பிசிசிஐ அறிவிக்க உள்ளது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 வீரர்கள் இடம்பெற உள்ளனர். இந்த இரு தொடர்களுக்கான 15 பேர் கொண்ட அணிகளும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அணியில் எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என தெரிகிறது. டி20 உலககோப்பை பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கினாலும், ஒரு மாதத்திற்கு முன்பே தங்களது அணியை முன்கூட்டியே ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும், சமர்பிக்க வேண்டும். இதனால் நியூசிலாந்து தொடருடன் சேர்த்து, டி20 உலககோப்பைக்கான இந்திய அணியையும் அகர்கர் அறிவிக்க போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தவிர சில ரிசர்வ் வீரர்களும் அறிவிக்கப்படுவார்கள். இதனால் மெயின் அணியில் ஏதேனும் வீரருக்கு காயம் அடைந்தால் கடைசி நேரத்தில் மாற்றி கொள்ளலாம். இதன் மூலம் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கும் டி20 உலககோப்பை கதவு திறக்கப்பட்டு இருக்கும். இந்திய அணி, ஜனவரி 11 முதல் 31 வரை நியூசிலாந்துடன் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட வெள்ளைப் பந்து தொடரை சொந்த மண்ணில் நடத்துகிறது. அதன் பின்பு, 2026 டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. பிப்ரவரி 7 அன்று மும்பையில் அமெரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா, பிப்ரவரி 12 அன்று டெல்லியில் நமீபியாவுடன் மோதும். தொடர்ந்து பிப்ரவரி 15 அன்று கொழும்பில் பாகிஸ்தானுடனும், பிப்ரவரி 18 அன்று அகமதாபாத்தில் நெதர்லாந்துடனும் விளையாடி குரூப் ஏ போட்டிகளை முடிக்கும். அட்டவணை இறுதியானாலும், இந்தியாவின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், நீண்டகால பேட்டிங் சரிவால் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். எனினுட்ம கேப்டனாக அவரே தொடர்வார். துணை கேப்டனாக கில் அறிவிக்கப்பட உள்ளார்.