இந்திய அணி முன்னேறியது எப்படி?

கொல்கத்தா, மார்ச் 2- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் சூப்​பர் 8 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்திய அணி, இரு முறை சாம்​பிய​னான மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யுடன் நேற்று மோதி​யது. கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் டாஸ் வென்ற இந்​திய அணி​யின் கேப்டன் சூர்​யகு​மார் யாதவ் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். இதையடுத்து மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி முதலில் பேட் செய்​தது.
கேப்​டன் ஷாய் ஹோப்​புடன், ராஸ்​டன் சேஸ் தொடக்க வீர​ராக களமிறங்​கி​னார். அர்​ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரில் ரன் அவுட் ஆவதில் இருந்து தப்​பித்த ராஸ்​டன் சேஸ் தொடர்ச்​சி​யாக 2 பவுண்​டரி​களை விரட்டி அசத்தினார். ஜஸ்​பிரீத் பும்ரா வீசிய 5-வது ஓவரின் 5-வது பந்தை ராஸ்டன் சேஸ் ஸ்கூப் ஷாட்​டில் பவுண்​டரி அடித்​தார். அடுத்த பந்தை அவர், கவர் திசை​யில் தூக்கி அடித்த போது எளி​தான கேட்ச்சை அபிஷேக் சர்மா தவற​விட்​டார். பவர்​பிளே​வில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி விக்​கெட் இழப்​பின்றி 45 ரன்​கள் சேர்த்​தது. சீராக ரன்​கள் சேர்த்த இந்த ஜோடியை வருண் சக்​ர​வர்த்தி பிரித்​தார். ஷாய் ஹோப் 33 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 32 ரன்​கள் எடுத்த நிலை​யில் வருண் சக்​ர​வர்த்தி பந்​தில் போல்​டா​னார். முதல் விக்​கெட்​டுக்கு ஷாய் ஹோப், ராஸ்​டன் சேஸ் ஜோடி 8.5 ஓவர்​களில் 68 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய ஷிம்​ரன் ஹெட்மயர் மட்​டையை சுழற்​றி​னார். ஹர்​திக் பாண்​டியா வீசிய 10-வது ஓவரில் ஷிம்​ரன் ஹட்மயர் சிக்​ஸர் ஒன்றை பறக்​க​விட்​டார். தொடர்ந்து வருண் சக்​ர​வர்த்தி வீசிய அடுத்த ஓவரில் தலா ஒரு சிக்ஸர், பவுண்​டரியை விரட்ட இந்த ஓவரில் 17 ரன்​கள் குவிக்​கப்​பட்​டன. 12-வது ஓவரை வீசிய ஜஸ்​பிரீத் பும்ரா 2 விக்​கெட்​களை வீழ்த்தி திருப்​பு​முனையை ஏற்​படுத்​திக் கொடுத்​தார்.