Home செய்திகள் தேசிய செய்திகள் இந்திய கடற்படைக்கு 18 அதிநவீன வாட்டர்ஜெட்: நார்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இந்திய கடற்படைக்கு 18 அதிநவீன வாட்டர்ஜெட்: நார்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம்

புதுடெல்லி, ஏப்ரல் 15- இந்​திய கடற்​படை​யின் அடுத்த தலை​முறை ஏவுகணை கப்​பல் திட்​டத்​திற்​காக, 18 அதிநவீன ‘கமே​வா’ வாட்​டர்​ஜெட் உந்​து​விசை அமைப்​பு​களை வழங்​கு​வதற்​கான ஒப்பந்தத்தை நார்வேயைச் சேர்ந்த கோங்​ஸ்​பெர்க் மேரிடைம் நிறு​வனம் பெற்​றுள்​ளது. இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: இந்​திய கடற்​படைக்கு தேவை​யான வாட்​டர்​ஜெட் கருவி​களை வழங்க நார்வே நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் செய்யப்​பட்​டுள்​ளது. வழக்​க​மான கப்​பல்​களில் காணப்​படும் விசிறி போன்ற புரொப்​பல்​லர் அமைப்​பிற்கு மாற்​றாக, இந்த வாட்டர்​ஜெட் தொழில்​நுட்​பம் நீரை உள்​ளிழுத்​து, அதிக வேகத்​தில் வெளி​யேற்​று​வதன் மூலம் கப்​பலை இயக்​கும். இதன் மூலம் கப்​பல்​கள் எதிரி​களின் ரேடார் பார்​வை​யில் படா​மல் அதிவேக​மாகச் செல்​ல​வும், கடலில் மிக லாவக​மாகத் திரும்​ப​வும் முடி​யும். இந்​தக் கப்​பல்​களைக் கட்டி வரும் கொச்சி கப்​பல் கட்​டும் தளத்​துடன் இணைந்து நார்வே நிறு​வனத்​துடன் இந்த ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது குறித்து கொச்சி கப்​பல் கட்​டும் தளத்​தின் செய்​தித் தொடர்பாளர் கூறுகை​யில், “ஏற்​க​னவே பல வர்த்தக ரீதி​யான திட்டங்​களில் இந்​நிறு​வனம் எங்​களுக்கு நம்​பக​மான கூட்டாளியாக இருந்​துள்​ளது. இந்த முக்​கி​யத் திட்​டத்​திற்​குத் தேவை​யான தரமான மற்​றும் நுணுக்​க​மான தொழில் ​நுட்​பக் கருவி​களை அவர்​கள் வழங்​கு​வார்​கள் என எதிர்​பார்க்கிறோம்” என்​றார்​.