இந்திய பொருட்களுக்கு சவுதி திடீர் தடை

ரியாத்: பிப்ரவரி 26-
நம் நாட்டுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. இருநாடுகள் இடையேயான வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் திடீரென்று நம் நாட்டில் இருந்து அனுப்பப்படும் கோழி, முட்டை உள்ளிட்டவற்றுக்கு சவுதி அரேபியா திடீரென்று தடை விதித்துள்ளது.
இதனை சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த ஆணையம் சார்பில், ”பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த லிஸ்ட்டில் இந்தியா மட்டுமின்றி பிற 39 நாடுகளும் உள்ளன. அதன்படி அதன்படி ஆப்கானிஸ்தான், அசர்பைஜான், ஜெர்மனி, இந்தோனேஷியா, ஈரான், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, பல்கேரியா, வங்கதேசம், தைவான், ஜிபூட்டி, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈராக், கானா, பாலஸ்தீனம், வியட்நாம், கம்போடியா, கஜகஸ்தான், கேமரூன், தென் கொரியா. வடகொரியா, லாவோஸ், லிபியா, மியான்மர், யுனைடெட் கிங்டம், எகிப்து, மெக்ஸிகோ, மங்கோலியா, நேபாளம், நைஜர், நைஜீரியா, ஹாங்காங், ஜப்பான், புர்கினா பாசோ, சூடான், செர்பியா, ஸ்லோவேனியா, ஐவரி கோஸ்ட் மற்றும் மான்டெனீக்ரோ ஆகிய நாடுகளிடம் இருந்து கோழி இறைச்சி, முட்டை உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இதற்கு தடை நடவடிக்கைக்கு முக்கிய காரணம் பறவை காய்ச்சலாகும். தற்போது நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நம் நாடு உள்பட 40 நாடுகளிடம் இருந்து கோழி இறைச்சி, முட்டை உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்த தடை என்பது தற்காலிகமானது தான். பறவை காய்ச்சல் பரவல் தீரும்பட்சத்தில் மீண்டும் சவுதி அரேபியா நம் நாடு உள்பட பிற நாடுகளிடம் இருந்து மீண்டும் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது.