வாஷிங்டன், செப். 16- அமெரிக்காவின் வரி விதிப்பால் நம் நாடும், சீனா இடையேயான உறவு வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த எல்லை மோதலில் இந்திய வீரர்களை உருக வைக்கும் எலக்ட்ரோ மேக்னட்டிக் ஆயுதத்தை பயன்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் பில் ஹாகர்ட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி போட்டுள்ளார். அதேபோல் சீனாவுக்கு 145 சதவீத வரியை அறிவித்தார். இதில் 30 சதவீத வரி மட்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதவிர ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மற்றும் சீனாவுக்கு 50 முதல் 100 சதவீத வரியை விதிக்க வேண்டும் என்று நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கிடையே தான் டிரம்பை சமாளிக்க இந்தியாவும், சீனாவும் கைகோர்த்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து இருநாடுகள் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. தற்போது டிரம்பால் இந்தியாவும், சீனா இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. வலுவாகும் சீனா – இந்தியா உறவு கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ நம் நாட்டுக்கு வந்தார். அதேபோல் கடந்த மாதம் 31 மற்றும் 1ம் தேதி பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண்பது மற்றும் வர்த்தகம் தொடர்பாக இருவரும் விவாதித்தனர். இது டிரம்புக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் இந்தியா – சீனா உறவு வலுப்பெற தொடங்கி உள்ளது.
Home செய்திகள் உலக செய்திகள் இந்திய வீரர்களுக்கு எதிராக எலக்ட்ரோ மேக்னட்டிக் ஆயுதத்தை யூஸ் செய்த சீனா?

















