இரவீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்:

சென்னை, பிப். 24- வியாசர்​பாடி​யில் சுமார் 800 ஆண்​டு​கள் பழமை வாய்ந்த மரக​தாம்​பாள் உடனுறை இரவீஸ்வரர் கோயில் உள்ளது. சூரிய பகவான் இத்​தலத்​துக்கு வந்து சிவபெரு​மானை வழிபட்​ட​தாக கருதப்​படு​வ​தால், மூல​வர் ‘இரவீஸ்வரர்’ என்ற பெயரில் அழைக்​கப்​படு​கிறார்.தின​மும் இக்​கோயி​லின் ராஜ கோபுரம் வழி​யாக நுழை​யும் சூரியக் கதிர்​கள் நந்தி தேவர் மற்​றும் மூல​வர் சிவலிங்​கத்​தின் மீது நேரடி​யாக பட்டு வழிபடு​வது சிறப்​பம்​சம் ஆகும். காலப்​போக்​கில், சுற்​றி​யுள்ள சாலைகளின் உயரம் அதி​கரித்​த​தால், கோயில் தரைமட்​டத்​தில் இருந்து சுமார் 5 அடி பள்​ளத்​துக்​குச் சென்​றது. இதனால் சூரிய ஒளி மூல​வர்மீது விழு​வ​தில் தடை ஏற்​பட்​டதுடன், மழைக்​காலங்​களில் கோயிலுக்​குள் மழைநீர் புகுந்து பக்​தர்​கள் பெரும் சிரமமடைந்​தனர். இந்த நிலை​யில், பக்​தர்​களின் நீண்​ட​நாள் கோரிக் கையை ஏற்​று, இந்து சமய அறநிலை​யத்துறை சார்​பில் ‘ஜாக்​கி’ தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​தி, ஒட்​டு மொத்த கோயிலை​யும் தரைமட்​டத்​துக்கு மேல் உயர்த்தி பலப்​படுத்​தும் பணி மேற்​கொள்​ளப்​பட்​டது.