இறு​திச் சடங்​கில் பங்கேற்பதை தடுக்க காஷ்மீரில் தலைவர்களுக்கு வீட்டுக்காவல்

ஸ்ரீநகர்: செப். 19-
ஜம்மு காஷ்மீரில் ஹுரி​யத் முன்​னாள் தலை​வர் அப்​துல் கனி பட்மறைவை முன்​னிட்​டு, பிரி​வினை​வாத ஆதரவு தலை​வர்​கள் ஒன்று கூடு​வதை தடுக்க, முன்​னாள் முதல்​வர் மெகபூபா முப்​தி, மக்​கள் மாநாட்டு கட்சி தலை​வர் சாஜத் லோன் உட்பட பலர் நேற்று வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்​டனர்.
ஹுரி​யத் மாநாட்டு கட்​சி​யின் முன்​னாள் தலை​வர் அப்​துல் கனி பட் உடல்நிலை பாதிப்பு காரண​மாக சோப்​பூரில் உள்ள அவரது இல்​லத்​தில் நேற்று முன்​தினம் இறந்​தார்.
இவரது இறு​திச் சடங்​கில் பிரி​வினை​வாத ஆதரவு தலை​வர்​கள் ஒன்று கூடு​வதை தவிர்க்க காஷ்மீரில் அரசி​யல் தலை​வர்​கள் சிலர் நேற்று வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்​டனர்.காஷ்மீர் முன்​னாள் முதல்​வர் மெகபூபா முப்​தி, மக்​கள் மாநாட்டு கட்​சி​யின் தலை​வர் சாஜத் லோன், ஹுரி​யத் மாநாட்டு கட்​சி​யின் தற்​போதைய தலை​வர் மிர்​வைஸ் உமர் பரூக் ஆகியோர் நேற்று முன்​தினம் இரவு முதல் வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்​டனர்.இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் மெகபூபா முப்தி வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:
மறைந்த தலை​வர் அப்​துல் கனி பட் மறைவுக்கு இரங்​கல் தெரி​விப்​பதை தடுத்து நிறுத்​து​வதற்​காக அரசி​யல் தலை​வர்​களை வீட்​டுக்​காவலில் வைக்​கும் முடிவு மோச​மானது.
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் இல்லை என்​பதை இது காட்​டு​கிறது. ஹஸ்​ரத்​பால் தர்​கா​வில் நடந்த சம்​பவம் மக்​களின் கோபத்தை காட்​டி​யுள்​ளது. மக்​களின் ஆழ்ந்த கோபத்​திலிருந்து எதை​யும் கற்​றுக்​கொள்ள மறுக்​கும் பாஜக, மக்​களின் நீண்​ட​கால உணர்​வு​களை அடக்​கு​கிறது.காஷ்மீரில் அமை​தியை ஏற்​படுத்த பாஜகவுக்கு ஆர்​வம் இல்​லை.
அரசி​யல் காரணங்​களுக்​காக காஷ்மீரை எப்​போதும் பதற்ற நிலை​யிலேயே வைத்​துள்​ளது. இது அபாயகர​மானது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார். சாஜத் லோன் எக்ஸ் தளத்​தில் விடுத்​துள்ள தகவலில், ‘‘பேராசிரியர் அப்​துல் கனி பட் இரங்​கல் கூட்​டத்​தில் பங்​கேற்​பதை தடுப்​ப​தற்​காக நான் வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்​டுள்​ளேன். இதை என்​னால் புரிந்​து​கொள்ள முடிய​வில்​லை. அவருக்கு இறுதி அஞ்​சலி செலுத்த எங்​களுக்கு உரிமை உள்​ளது’’ என்றார்.