இழிவாக விமர்சித்த துணை தாசில்தார் கைது

காசர்கோடு, ஜூன் 14- ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பெண்ணை இழிவாக பேசியதாக கேரளாவில் துணை தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா கொய்புரம் என்ற ஊராட்சியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா கோபக்குமரன், 42. ஓமன் நாட்டிலும், கடந்த ஓராண்டாக பிரிட்டனிலும் நர்சாக பணியாற்றி வந்தார். அவருக்கு 2019ம் ஆண்டு கேரளா சுகாதாரத் துறையில் நர்ஸ் பணி கிடைத்தது. ஆனால், வெளிநாட்டு பணி ஒப்பந்தம் காரணமாக கேரளா அரசு பணியில் அவர் சேர முடியவில்லை. தொடர்ந்து விடுப்பில் இருந்தார். இந்நிலையில், வெளிநாட்டு பணி ஒப்பந்தம் நிறைவு பெறுவதை முன்னிட்டு, கேரளா அரசின் பணியில் சேரும் நோக்கத்துடன், அது தொடர்பான விண்ணப்பம் அளிப்பதற்காக நான்கு நாட்களுக்கு முன் இந்தியா வந்திருந்தார். அந்த வேலைகளை முடித்துவிட்டு, லண்டன் செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார்.அதன்படி கொச்சியில் இருந்து ஆமதாபாத் சென்ற அவர், ஏர் இந்தியா விமானத்தில் லண்டன் புறப்பட்டபோது விமான விபத்தில் சிக்கி பலியானார். இது பற்றிய விவரம் வருமாறு: கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா கொய்புரம் என்ற ஊராட்சியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா கோபக்குமரன், 42. ஓமன் நாட்டிலும், கடந்த ஓராண்டாக பிரிட்டனிலும் நர்சாக பணியாற்றி வந்தார்.அவருக்கு 2019ம் ஆண்டு கேரளா சுகாதாரத் துறையில் நர்ஸ் பணி கிடைத்தது. ஆனால், வெளிநாட்டு பணி ஒப்பந்தம் காரணமாக கேரளா அரசு பணியில் அவர் சேர முடியவில்லை. தொடர்ந்து விடுப்பில் இருந்தார். இந்நிலையில், வெளிநாட்டு பணி ஒப்பந்தம் நிறைவு பெறுவதை முன்னிட்டு, கேரளா அரசின் பணியில் சேரும் நோக்கத்துடன், அது தொடர்பான விண்ணப்பம் அளிப்பதற்காக நான்கு நாட்களுக்கு முன் இந்தியா வந்திருந்தார். அந்த வேலைகளை முடித்துவிட்டு, லண்டன் செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார்.அதன்படி கொச்சியில் இருந்து ஆமதாபாத் சென்ற அவர், ஏர் இந்தியா விமானத்தில் லண்டன் புறப்பட்டபோது விமான விபத்தில் சிக்கி பலியானார். இந்த தகவல்கள் வெளியான நிலையில், வெள்ளரிகுண்டு துணை தாசில்தார் பவித்ரன் ஜாதி ரீதியாக விமர்சித்தார். அரசு வேலையில் சேராமல் வெளிநாட்டு வேலையில் இருந்தது பற்றியும் கடுமையாக விமர்சித்தார். பவித்ரனின் இந்த பதிவு, கேரளாவில் பெரும் கண்டனங்களை எழுப்பியது. சமூக வலை தளங்களில் வெளியான அவரின் பதிவு எதிரொலியாக கன்ஹன்காடு, வெள்ளரிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், மாதர் சங்கத்தினரும் போராட்டத்தில் குதித்தன. அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின. இதை அறியாத பவித்ரன் வழக்கம் போல் நேற்று தமது அலுவலகத்தில் பணிக்கு வந்தார். அவரை தற்காலிக பணிநீக்கம் செய்யுமாறு கலெக்டர் இன்பசேகர் உத்தரவிட்டார். தொடர்ந்து பவித்ரன் இதேபோன்ற செய்கைகளில் ஈடுபட்டு இருப்பதால் நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று அரசுக்கும் பரிந்துரைத்தார்.