
டெஹ்ரான்: பிப்ரவரி 19-
அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டி வருகிறார்.
அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை குவித்துள்ளது. இந்த பதற்றத்துக்கு நடுவே தான் ரஷ்யா உள்ளே புகுந்துள்ளது. அதாவது ரஷ்யாவும், ஈரானும் நாளை ஓமன் கடற்பகுதியில் கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்த உள்ளது. அமெரிக்காவும், ஈரானும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. அதேவேளையில் ஈரானும், ரஷ்யாவும் நல்ல நட்பு நாடுகளாக உள்ளன. இதனால் தான் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரானை மிரட்டும்போதெல்லாம் ரஷ்யா தலையிடு செய்து வருகிறது. மேலும் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு ரஷ்யா உதவி வருகிறது.
அந்த வகையில் தான் ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
போர்க்கப்பல் – போர் விமானம் குவிப்பு ஈரான் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி உள்ளார். அதுமட்டுமின்றி மத்திய கிழக்கில் ஈரானையொட்டி பகுதிகளில் அமெரிக்கா தனது படைபலத்தை பலப்படுத்தி உள்ளது. போர்க்கப்பல், போர் விமானங்களை குவித்துள்ளது. அமெரிக்கா படை வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இது ஈரான் – அமெரிக்கா இடையேயான பதற்றத்தை தணியவிடாமல் வைத்துள்ளது. ரஷ்யா – ஈரான் கூட்டு பயிற்சி மேலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் உரிய முறையில் ஈரானும் பதிலடி கொடுக்கும் என்று வார்னிங் செய்துள்ளது. இப்படியான சூழலில் தான் ஈரானும், ரஷ்யாவும் ஓமன் கடற்பகுதியில் நாளை முதல் கூட்டு கடற்படை பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளன. ஈரானை சுற்றி அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிலை நிறுத்தி உள்ள நிலையில் இந்த பயிற்சி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.



















