ஈரான் உடனான போர் 4 வாரங்கள் நீடிக்கலாம்: ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: மார்ச் 2-
ஈரான் – அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ச் சூழல் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், ஈரானின் பரப்பளவு மற்றும் தற்போதைய ராணுவ நிலவரத்தைக் கணக்கில் கொண்டு இந்த காலக்கெடுவைத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் தற்காலிகமானவை அல்ல என்றும், அமெரிக்காவின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை போரின் வேகம் குறையாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ட்ரம்ப், இது தாங்கள் எதிர்பார்த்ததை விடப் மிகப்பெரிய வெற்றி என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், இந்தப் போரில் மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதை அவர் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். அவர்கள் மிகச்சிறந்த வீரர்கள் என்று புகழாரம் சூட்டிய ட்ரம்ப், போர்க்களத்தில் இத்தகைய உயிரிழப்புகள் துரதிர்ஷ்டவசமானவை எனினும் தவிர்க்க முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, “அவர்கள் இப்போது பேச விரும்புகிறார்கள், ஆனால் கடந்த வாரமே பேசியிருக்க வேண்டும்” என்று பதிலளித்த அவர், தற்போதைக்குத் தாக்குதல்கள் தொடரும் என்று உறுதிபட தெரிவித்தார்.
அணு ஆயுதம் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்டுள்ள ஈரான், நாகரிக உலகிற்கே பெரும் அச்சுறுத்தல் என்பதால் இந்தத் தாக்குதல் அவசியமானது என்று அவர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளின் தலைவர்களுடன் தான் தொடர்ந்து பேசி வருவதாகவும், அமெரிக்கப் படைகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரைவில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்​தில் ஈரானிய மக்​கள் ஆட்சி நிர்​வாகத்தை தங்​கள் கையில் எடுத்​துக் கொள்ள வேண்​டு​கிறேன். ஈரானின் ஐஆர்​ஜிசி, ராணுவம், காவல் துறையை சேர்ந்த வீரர்​கள் போரிட விரும்​ப​வில்​லை. அவர்​கள் ஈரானின் தேசப்​பற்​றாளர்​களு​டன் இணை​வார்​கள் என உறு​தி​யாக நம்​பு​கிறேன். ஈரானின் தீய சக்​தி​கள் மீது அமெரிக்​கா​வின் துல்​லிய தாக்​குதல் தொடரும். இந்த தாக்​குதல் ஒரு வாரம் வரை நீடிக்​கலாம். ஒரு வாரத்​தை​யும் தாண்டி செல்ல வாய்ப்பு இருக்​கிறது. எங்​களது குறிக்​கோள் நிறைவேறும்​வரை தாக்​குதல் தொடரும். இதன்​மூலம் மத்​திய கிழக்கு முழு​வதும் அமைதி திரும்​பும். மத்​திய கிழக்கு மட்​டுமன்றி உலகம் முழு​வதுமே அமைதி திரும்​பும். பதிலடி கொடுக்​கப்​படும் என்று ஈரானின் இப்​போதைய ஆட்​சி​யாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர். முந்​தைய தாக்​குதல்​ களை​விட அதிதீ​விர​மாக தாக்குதல் நடத்​து​வோம் என்கின்றனர். அவ்வாறு பதில் தாக்​குதல் நடத்​தாமல் இருப்​பது ஈரான் ஆட்​சி​யாளர்​களுக்கு நல்​லது. ஒரு​வேளை அவர்​கள் தாக்​குதல் நடத்​தி​னால் நாங்​களும் தாக்​குதல் நடத்​து​வோம். எங்​களது தாக்​குதல், உலகம் இது​வரை காணாத வகை​யில் அதிதீ​விர தாக்குதலாக இருக்​கும். இதை ஈரான் ஆட்​சி​யாளர்​கள் கவனத்​தில் கொள்ள வேண்​டும்” என்று ட்ரம்ப்​ எச்சரித்துள்ளார். ஈரானின் ராணுவ மற்றும் பொருளாதார மையங்களைக் குறிவைத்துத் தொடர்ந்து துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்பதால், வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றம் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.