
முனிச்: பிப்ரவரி 16- போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுக்கு பதிலாக உக்ரைன் மீதே அமெரிக்கா அதிகஅழுத்தம் கொடுப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்கமாக குற்றச்சாட்டி இருப்பதன் பின்னணி குறித்து வெளியாகி உள்ளது. அமெரிக்கா அதிபர் டிரம்ப், ரஷ்யா உக்ரைன் போரை எப்படியாவது விரைவில் முடிக்க விரும்புகிறார்கள், அதற்காக உக்ரைனை சில விட்டுக்கொடுப்புகளைச் செய்யச் சொல்லி வலியுறுத்துகிறார். இது ஐரோப்பா முழுவதுமே கடந்த சில வாரங்களாகவே விவாதத்தில் இருந்து வருகிறது. உலகின் பல்வேறு சந்தைகள் சரிவுக்கு காரணமாக அமைந்த போர் என்றால் அது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் போர் தான். கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கி 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவி வழங்கி வருகின்றன. அமெரிக்கா நிதி ஒதுக்க மறுப்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கொட்டத்தை அடக்க உக்ரைனை ஆயுதம் போல் பயன்படுத்தி வந்த நிலையில், அதிகப்படியான நிதி செலவாகுவதை, அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்தாண்டு பொறுப்பேற்ற டிரம்ப்புக்கு பிடிக்கவில்லை. போரில் உக்ரைனுக்கு தேவையில்லாமல் அதிக நிதி ஒதுக்கப்படுவதாக கூறி நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். அதற்கு பதிலாக கனிம வளம் நிறைந்த அந்த நாட்டின் சுரங்க உரிமையை கேட்டார். வியாபரியான டிரம்ப், வணிக கண்ணோட்டத்துடனே உக்ரைனை அணுகியது பேசு பொருளானது. இத்தனை நாட்களாக ஆதரித்து வந்த அமெரிக்காவே இப்படி பேசுகிறதே என்று உக்ரைன் ஆடிப்போனது.சமரசம் சாதகமாக இல்லை அத்துடன் முடியவில்லை பிரச்சனை.. போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே டிரம்ப் தலைமையிலான குழு தற்போது சமரசம் செய்து வருகிறது. கடந்த வாரத்தில் போர் நிறுத்தத்திற்கான அமைதி பேச்சுவார்த்தை அபுதாபியில் நடந்தது. அதற்கு காரணம் ரஷ்யாவிடம் உக்ரைன் பல சமரசங்களை செய்யவேண்டியதிருந்தது. இதனை உக்ரைன் ஏற்க மறுத்தது.உக்ரைனுக்காக பேச யாருமே இல்லை “அமைதி ஒப்பந்தத்தை ஏற்க அதிக அழுத்தத்திற்கு உக்ரைன் உள்ளாக்கப்பட்டு வருகிறது.



















