உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் – மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: ஆகஸ்ட் 18- டெல்​லி​யில் ரூ.11,000 கோடி மதிப்​பிலான நெடுஞ்​சாலை திட்​டங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்​கி வைத்​தார். அப்​போது பேசிய அவர், உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வியா​பாரி​கள் விற்​பனை செய்ய வேண்​டும் என்று அழைப்பு விடுத்​தார். தலைநகர் டெல்​லி​யின் சிவ​மூர்த்தி பகு​தி​யில் இருந்து ஹரி​யா​னா​வின் குரு​கி​ராம் வரை 29 கி.மீ. தொலை​வுக்கு புதிய நெடுஞ்​சாலை அமைக்​கப்​பட்​டது.
இதில் ஹரி​யா​னா​வுக்கு உட்​பட்ட 19 கி.மீ. தொலைவு சாலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து டெல்லி எல்​லைக்கு உட்​பட்ட 10 கி.மீ. தொலைவு சாலை பணி ரூ.5,360 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்​டது. துவாரகா நெடுஞ்​சாலை என்​றழைக்​கப்​படும் இந்த சாலையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்​து​வைத்​தார்.இதே​போல டெல்​லி​யின் அலிப்​பூர் முதல் டிச்​சான் கலான் பகுதி வரை ரூ.5,580 கோடி​யில் நகர்ப்​புற விரி​வாக்க சாலை அமைக்கப்பட்டு உள்​ளது. டெல்​லி​யின் 3-வது ரிங் சாலை என்​றழைக்​கப்​படும் இந்த சாலையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்​தார். டெல்லி ரோஹினி பகு​தி​யில் நடந்த விழா​வில் அவர் பேசி​ய​தாவது: டெல்​லி​யின் போக்​கு​வரத்து கட்டமைப்புகளை மேம்​படுத்த மத்​திய அரசு முன்​னுரிமை அளித்து வரு​கிறது.
புதி​தாக திறக்​கப்​பட்​டிருக்​கும் இரு நெடுஞ்​சாலைகளால் வியா​பாரி​கள், விவ​சா​யிகள், பொது​மக்​கள் பெரிதும் பயன் அடைவார்கள். டெல்லி மக்​களின் அனைத்து பிரச்​சினை​களுக்​கும் தீர்வு காணப்​பட்டு வரு​கிறது.
விரை​வில் ஜிஎஸ்டி வரி குறைக்​கப்பட உள்​ளது.
இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்​டுமே நீங்​கள் விற்​பனை செய்ய வேண்​டும். வெளி​நாட்டு பொருட்​களை விற்பனை செய்​வதை தவிர்க்க வேண்​டும். இதே​போல நாட்டு மக்​கள் அனை​வரும் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்டுமே வாங்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.