Home மாவட்டங்கள் பெங்களூர் உழைப்பாளர் தினம் உற்சாக கொண்டாட்டம்

உழைப்பாளர் தினம் உற்சாக கொண்டாட்டம்

இன்று உழைப்பாளர்களின் மே தின விழா என்றாலும் பெங்களூரில் தூய்மை பணியாளர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றிய காட்சி.

பெங்களூரு: மே 1 –
மே ஒன்றாம் தேதி இன்று உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கட்டடக மாநிலத்திலும் பல்வேறு இடங்களில் மே தின சிறப்பு ஊர்வலம்
பொதுக்கூட்டங்கள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெங்களூரில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சிறப்பு பொதுக் கட்டங்கள் விழாக்கள் நடத்தப்பட்டது.
அரசியல் கட்சித் தலைவர்கள் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உழைப்பாளர்களின் உரிமைகளை தட்டிப் பறிக்கக் கூடாது குறிப்பாக தனியார் நிறுவனங்களில்
தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சக் கூடாது என்ற விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பி விழாவை உற்சாகமாக கொண்டாடினர் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கப்பட்டது