ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகளை பிடிக்க தீவிர வேட்டை

பாட்னா: ஆகஸ்ட் 29-நே​பாளம் வழி​யாக பிஹாருக்​குள் பாகிஸ்​தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிர​வா​தி​கள் 3 பேர் ஊடுருவி உள்​ளனர். அவர்​களின் புகைப்​படங்​களை போலீ​ஸார் வெளி​யிட்டு உள்​ளனர். அவர்​களை கண்​டு​பிடிக்க மாநிலம் முழு​வதும் தீவிர தேடு​தல் வேட்டை நடத்​தப்​பட்டு வரு​கிறது.
வரும் அக்​டோபர் அல்​லது நவம்​பரில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதையொட்டி பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​கள் இப்​போதே தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பிஹார் முழு​வதும் வாகன பேரணி நடத்தி வரு​கிறார். அவரோடு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்​சி​யின் தலை​வர்​களும் இணைந்து உள்​ளனர்.
இந்த சூழலில் நேபாளம் வழி​யாக பிஹாருக்​குள் பாகிஸ்​தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிர​வா​தி​கள் 3 பேர் ஊடுருவி இருப்​ப​தாக உளவுத் துறை எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. பாகிஸ்​தானின் ராவல் பிண்​டியை சேர்ந்த ஹூசைன், உமர்​கோட்டை சேர்ந்த அடில், பகவல்​பூரை சேர்ந்த உஸ்​மான் ஆகியோர் ஆகஸ்ட் முதல் வாரத்​தில் பிஹாருக்​குள் ஊடுருவி உள்​ளனர். அவர்​கள் நாச வேலைகளில் ஈடுபட திட்​ட​மிட்டு உள்​ளனர் என்று உளவுத் துறை அதி​காரி​கள் தெரி​வித்து உள்​ளனர்.
உளவுத் துறை அளித்த தகவல்​களின் அடிப்​படை​யில் 3 தீவிர​வா​தி​களின் புகைப்​படங்​களை பிஹார் போலீ​ஸார் வெளி​யிட்டு உள்​ளனர். அவர்​களை கண்​டு​பிடிக்க மாநிலம் முழு​வதும் தீவிர தேடு​தல் வேட்டை நடத்​தப்​படு​கிறது. இதுகுறித்து பிஹார் போலீஸ் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: இந்​தி​யா​வும் நேபாள​மும் 1,751 கி.மீ. எல்​லையை பகிர்ந்து கொண்​டுள்​ளன. பிஹாரின் 7 மாவட்​டங்​கள் நேபாள எல்​லை​யில் அமைந்​துள்​ளன. இந்த 7 மாவட்​டங்​களின் 729 கி.மீ. எல்​லைப் பகு​தி​களில் சஷஸ்​திர சீமா பல் படை வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்டு உள்​ளனர்.

நேபாள குடி​யுரிமை அல்​லது இந்​திய குடி​யுரிமை ஆதா​ரங்​களை போலி​யாக உரு​வாக்கி 3 தீவிர​வா​தி​களும் பிஹாருக்​குள் நுழைந்​திருக்​கலாம் என்று சந்​தேகிக்​கிறோம். நள்​ளிரவு நேரத்​தில் 3 தீவிர​வா​தி​களும் பாத​சா​ரி​களாக பிஹாருக்​குள் நுழைந்​திருக்​க​வும் வாய்ப்பு இருக்​கிறது. தற்​போதைய சூழலில் பாகிஸ்​தானை சேர்ந்த சுமார் 3,000-க்​கும் மேற்​பட்​டோர் சுற்​றுலா விசா​வில் நேபாளத்​தில் தங்கி உள்​ளனர். அவர்​களை இந்​திய உளவுத் துறை உன்​னிப்​பாக கண்​காணித்து வரு​கிறது.