எச்125 ஹெலிகாப்டர் தயாரிப்பு துவக்கம்

டெல்லி: பிப்ரவரி 18-
டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.
முதற்கட்டமாக மும்பை வந்திறங்கிய மேக்ரானை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். மும்பையில் உள்ள லோக் பவனில் மோடியும், மேக்ரானும் இருநாட்டு உறவு குறித்து விவாதித்தனர். முன்னதாக, கர்நாடகாவின் வேமகலில், டாடா நிறுவனம், ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் H125 ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கான அசெம்பிளி லைனை மோடியும், மேக்ரானும் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய மோடி, இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பு வாய்ந்தவை. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி வரை பறக்கும் திறன் கொண்ட உலகின் ஒரே ஹெலிகாப்டரை இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து இந்தியாவில் தயாரிக்கவுள்ளன என்பதை நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்” என்றார்.