“எப்போது இந்தியா திரும்புவேன் என கூற முடியாது” – விஜய் மல்லையா தகவல்

மும்பை, பிப். 19- பிரிட்​டனில் இருந்து வெளி​யேற அந்​நாட்டு சட்​டப்​படி தடை விதிக்​கப்​பட்​டுள்​ள​தால், எப்​போது இந்​தியா திரும்​புவேன் என்று கூற முடி​யாது எனத் தொழில​திபர் விஜய் மல்​லையா மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​துள்​ளார். வங்​கி​களில் ரூ.9,000 கோடிக்​கும் அதி​க​மான கடன் பெற்று மோசடி செய்​த​தாகத் தொடரப்​பட்ட வழக்​கில், விஜய் மல்​லையாவை இந்​தி​யா​வுக்கு கொண்டு வரு​வதற்​காக அமலாக்​கத் துறை எடுத்த நடவடிக்​கையை எதிர்த்து மல்​லையா தரப்​பில் மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்​தது. இந்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், இந்​தி​யச் சட்​டத் திட்​டங்​களுக்கு கட்​டுப்​பட்டு இந்​தியா திரும்​பி​னால் மட்​டுமே உங்​கள் மனு பரிசீலிக்​கப்​படும். எப்​போது இந்​தியா திரும்​புவீர்​கள் என்​பது குறித்து பிர​மாணப் பத்​திரம் தாக்​கல் செய்ய வேண்​டும் என்று உத்​தர​விட்​டிருந்​தது. இந்​நிலை​யில், இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்போது மல்​லையா தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் அமித் தேசாய் கூறுகை​யில், “தொழில​திபர் மல்​லை​யா​வின் இந்திய பாஸ்​போர்ட் 2016-ம் ஆண்டு இந்​திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனால், அவரிடம் இப்​போது இந்​திய பாஸ்​போர்ட் இல்​லை. மேலும், மல்​லையா இங்​கிலாந்து மற்​றும் வேல்ஸை விட்டு வெளி​யேறவோ அல்​லது வெளி​யேற முயற்​சிக்​கவோ அல்​லது எந்தவொரு சர்​வ​தேச பயண ஆவணத்​திற்​கும் விண்​ணப்​பிக்​கவோ அல்​லது வைத்​திருக்​கவோ அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. எந்தவொரு சந்​தர்ப்​பத்​தி​லும், மனு​தா​ரர் எப்​போது இந்​தியா திரும்பு​வார் என்பதை துல்​லிய​மாகக் கூற முடி​யாது” என்று நீதிமன்​றத்​தில் மல்லை​யா​வின் அறிக்​கையை தேசாய் வாசித்தார். இதையடுத்​து, மல்​லை​யா​வின் அறிக்கை குறித்து மத்​திய அரசு தனது பதிலை தாக்​கல் செய்ய உத்​தர​விட்ட நீதிப​தி​கள், விசாரணையை அடுத்த மாதம் ஒத்​தி​வைத்​தனர்.