எல்லையில் பதட்டம் அதிகரிப்பு

புதுடெல்லி, ஏப்ரல் 26 –
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பயங்கரவாதிகளை வேட்டையாடத் தொடங்கியுள்ளது, மேலும் இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலும் பதட்டமான சூழ்நிலை தொடர்கிறது. இந்தியா எடுக்கும் ராஜதந்திர நடவடிக்கைகளை கண்டு பீதி அடைந்துள்ள பாகிஸ்தான் கடும் ஆத்திரம் அடைந்து எல்லையில் இந்திய துருப்புகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்தியா ஆவேச பதிலடி கொடுத்து பாகிஸ்தான் வாலை ஓட்ட நறுக்கி வருகிறது. இதற்கிடையே பயங்கரவாத தாக்குதலுக்கு துணை போன மேலும் 3 தீவிரவாதிகளின் வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டது
எல்லையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து ஊழியர்களின் விடுப்புகளும் ரத்து செய்யப்பட்டு, மருத்துவ அவசரநிலைக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தனது குடிமக்கள் நாளைக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற காலக்கெடுவை விதித்துள்ளது, மேலும் எல்லை மற்றும் சிந்து நதியை மூடுவது உள்ளிட்ட பல கடுமையான நடவடிக்கைகளையும் விதித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு தடை செய்துள்ளது. இதன் விளைவாக, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் உடனடி பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. நள்ளிரவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்புகள் இல்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.