பெய்ஜிங், ஜன. 8- திபெத் நிலநடுக்கத்தின் எதிரொலியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுற்றுலா பயணிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது.சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் ஜிகாசே மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.நில அதிர்வுகள் பதிவான பகுதி டிங்கிரி பகுதி திபெத்தின் புனித இடமாக அறியப்படுகிறது. இது எவரெஸ்ட் சிகரத்தின் அடித்தள முகாம் ஆகும். எதிர்பாராத இந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டிங்கிரி முகாமில் உள்ள சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், அங்குள்ள சீன அறிவியல் மையத்தில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இந் நிலையில், எவரெஸ்ட் சிகரத்தை காண சுற்றுலா பயணிகளுக்கு சீனா தற்காலிகமாக தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அங்குள்ள சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.