
வாஷிங்டன்: பிப். 20-
ஏலியன்கள் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி உலகெங்கும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த மெகா கேள்விக்கு இப்போது நமக்கு விடை கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஏலியன்கள் தொடர்பான அனைத்து ரகசிய டாக்குமென்டுகளையும் பொதுவெளியில் வெளியிடுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே உயிர்கள் இருக்காது..
வேறு கிரகங்களிலும் உயிர்கள் இருக்கலாம் என்று நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. இருப்பினும், ஏலியன்கள் இருப்பு தொடர்பாக உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. பல தரப்பும் இது குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்வதால் இதில் சஸ்பென்ஸ் தான் தொடர்கிறது.ஏலியன்கள் இதற்கிடையே இந்த கேள்விக்கு ஒரு வழியாக நமக்கு விடை கிடைக்கப் போவதாகத் தெரிகிறது. வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFOs) தொடர்பான அரசு டாக்குமென்ட்களை பொதுவெளியில் வெளியிடுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் பலரும் இந்தத் தகவல்களை வெளியிட வேண்டும் எனச் சுமார் 10 ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இப்போது தான் அதிபர் டிரம்ப் அது தொடர்பாக உத்தரவிட்டுள்ளார்.டிரம்ப் உத்தரவு தனது உத்தரவு குறித்து டிரம்ப் ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில், “மக்கள் மிகப் பெரியளவில் ஆர்வம் காட்டியதால், வேற்றுக்கிரகவாசிகள், வேற்றுலக வாழ்க்கை, அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள், மற்றும் பறக்கும் தட்டுகள் தொடர்பான அரசு டாக்குமென்டுகளை அடையாளம் கண்டு வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளேன். போர் விவகாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் மற்றும் முகமைகளுக்கு இது தொடர்பாக உத்தரவைப் பிறப்பித்துள்ளேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.



















