சென்னை: நவம்பர் 11-
காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், தங்கள் ஊழியர்களின் உற்பத்தித்திறனைக் கண்காணிக்க புதிய முறைகளை ஆராய்ந்து வருகிறது. மவுஸ் மற்றும் கீபோர்டு செயல்பாடுகளைக் கண்காணிப்பதன் மூலம் ஊழியர்கள் வேலை செய்யாமல் இருப்பதை இந்த நிறுவனம் கண்டறிய திட்டமிட்டுள்ளது. நாஸ்டாக் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த நிறுவனம், இந்திய பங்குச் சந்தைகளிலும் பட்டியலிடப்பட பரிசீலித்து வருகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, காக்னிசென்ட் நிறுவனம், ProHance போன்ற பணியாளர் மேலாண்மை கருவிகளைப் பற்றி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியது. இதன் மூலம், நுண்-கண்காணிப்பு நடவடிக்கைகளை இந்த நிறுவனம் தொடங்கி உள்ளது. அதாவது ஊழியர்களை தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது.இந்த பயிற்சியானது, ஊழியர்கள் எவ்வளவு நேரம் மவுஸ் அல்லது கீபோர்டைப் பயன்படுத்த வேண்டும், மற்றும் எவ்வளவு நேரம் சிஸ்டத்திலிருந்து விலகி இருக்கலாம் என்பதை வரையறுக்கிறது. 300 வினாடிகளுக்கு மேல் மவுஸ் அல்லது கீபோர்டு செயல்பாடு இல்லாவிட்டால், ஊழியர் “செயல்பாட்டற்றவர்” என்று குறிக்கப்படுவார் என்று அறிக்கை கூறுகிறது. அதேபோல், ஊழியரின் கணினி 15 நிமிடங்கள் செயலற்று இருந்தால், அவர் “சிஸ்டத்திலிருந்து விலகி மற்ற நடவடிக்கைகளில்” ஈடுபடுவதாகக் குறிக்கப்படும்.
இந்த நேர வரம்புகள் குறிப்பிட்ட குழுக்களின் விருப்பத்திற்கு உட்பட்டவை. இந்த பயிற்சி எத்தனை ஊழியர்களுடன் பகிரப்பட்டது, ProHance தவிர வேறு கருவிகள் இதில் உள்ளனவா, அல்லது இது எப்போது நிறுவனம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை















