ஐபிஎல் மினி ஏலம்

சென்னை, டிச. 16- ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி வீரர்கள் இன்று (16-ம் தேதி) பிற்பகல் 2.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறுகிறது. ஏலப்பட்டியலில் 359 வீரர்கள் இடம் பெற்றுள்னனர். இதில் இருந்து 31 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இதற்காக 10 அணிகளும் கூட்டாக ரூ.237.55 கோடியை செலவிட உள்ளன. இந்த ஏலத்தை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சானல் மற்றும் ஜியோஸ்டார் செயலி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஒவ்வொரு அணியும் கையிருப்பு வைத்துள்ள தொகை, அந்த அணிகளுக்கு எத்தனை வீரர்கள் தேவை, எந்த மாதிரியான வீரர்களை ஏலம் எடுக்கக்கூடும் என்பது குறித்த தகவல்களை விரிவாக காணலாம். டெல்லி கேபிடல்ஸ் – தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள்: நிதிஷ் ராணா, அபிஷேக் போரல், அஜய் மண்டல், அசுதோஷ் சர்மா, அக்சர் படேல், துஷ்மந்தா சமீரா, கருண் நாயர், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், மாதவ் திவாரி, மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, நடராஜன், திரிபுரானா விஜய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் குமார் நிகம், முகேஷ் குமார். அணியின் தேவை: டெல்லி அணி 17 பேரை தக்கவைத்துள்ளது. விளையாடும் லெவனை இதில் இருந்து அந்த அணி தேர்வு செய்யலாம். எனினும் அணியை வலுப்படுத்தும் வகையில் தொடக்க பேட்ஸ்மேன் நடுவரிசை வீரர், வேகப்பந்து வீச்சாளர் ஆகியோரை குறிவைக்கக்கூடும். கடந்த முறை டெல்லி அணி தொடக்க ஜோடியை 7 முறை மாற்றியது. குறிவைக்கப்பட வாய்ப்புள்ள வீரர்கள்: குயிண்டன் டி காக், பதும் நிசங்கா, ஜேமி ஸ்மித், ஜானி பேர்ஸ்டோ, மதீஷா பதிரனா, மேட் ஹென்றி, முஸ்டாபிஸுர் ரஹ்மான்.கையிருப்பு தொகை: ரூ.21.80 கோடி தேவையான வீரர்கள்: 8 இந்திய வீரர்கள்: 3 வெளிநாட்டு வீரர்கள்: 5 மும்பை இந்தியன்ஸ் – தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள்: ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, சூர்யகுமர் யாதவ், ரியான் ரிக்கெல்டன், திலக் வர்மா, டிரெண்ட் போல்ட், ஷர்துல் தாக்குர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு, மயங்க் மார்கண்டே, ஏ.எம்.கசன்ஃபர், அஷ்வனி குமார், கார்பின் போஷ், தீபக் சாஹர், ஜஸ்பிரீத் பும்ரா, மிட்செல் சான்ட்னர், நமன் திர், ரகு ஷர்மா, ராஜ் பவா, ராபின் மின்ஸ், வில் ஜாக்ஸ். அணியின் தேவை: மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை தேவைகள் அனைத்தையும் கொண்டுள்ளது. அந்த அணியின் கைவசம் ரூ.2.75 கோடி மட்டு உள்ளது.