தாலின்: செப்டம்பர் 20-
எஸ்டோனிய வான்பரப்பில் மூன்று ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதை நேட்டோ படைகள் இடைமறித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ஜார்ஜியாவில் ரஷ்ய ட்ரோன்கள்
நுழைந்திருந்த சம்பவம் பேசுபொருளாகியிருந்த நிலையில், தற்போது எஸ்டோனியாவுக்குள் ரஷ்ய போர் விமான நுழைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எஸ்டோனியா என்பது, ரஷ்யாவின் பக்கத்து நாடாகும். உக்ரைனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றாலும் கூட, ஏன் இந்த நாட்டின் எல்லைக்குள் ரஷ்ய ராணுவ விமானங்கள் நுழைந்தன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதேபோல உக்ரைன் போரை ரஷ்யா கைவிடாத நிலையில், போரை விரிவுப்படுத்த நேட்டோவை உள்ளே இறக்கிவிட்டிருக்கிறது அமெரிக்கா. எனவேதான் போலாந்து, எஸ்டோனியா உள்ளிட்ட நாடுகள் மூலம் நேட்டோ தயாராகி வருகிறது.
போர் விமானங்களின் அத்துமீறலை, எஸ்டோனிய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேட்டோ செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினர். ரஷ்ய விமானங்கள் இறுதியில் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று எஸ்டோனிய பிரதமர் கிரிஸன் மிக்கல் கூறியிருக்கிறார். ரஷ்ய விமானங்களுக்கு எதிராக நேட்டோ எடுத்த நடவடிக்கையை இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே பாராட்டியிருக்கிறார்.
அனுமதியின்றி எஸ்டோனிய வான்பரப்பில் நுழைந்த மூன்று MiG-31 ரக விமானங்கள், சுமார் 12 நிமிடங்கள் எல்லைக்குள் சுற்றிக்கொண்டிருந்தன என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது


















