புதுடில்லி, நவ. 6- காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம் சாட்டிய, பிரேசில் மாடல் அழகியின் புகைப்படம் இடம் பெற்றதாக கூறப்படும் வாக்காளர்களில் ஒருவரான பிங்கி ஜூகிந்தர், ‘’நான் எந்த தவறும் செய்யவில்லை. வாக்கு திருட்டு ஆதாரமற்றது’’ என குற்றம் சாட்டி உள்ளார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., எம்.பி.,யுமான ராகுல், ஓட்டு திருட்டு குற்றச்சாட்டை மீண்டும் எழுப்பினார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘’ ஹரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில், 25 லட்சம் ஓட்டுகள் திருடப்பட்டுள்ளன.
அதில், 5.21 லட்சம் பேர் போலி வாக்காளர்கள், 93,174 பேர் தகுதியற்ற வாக்காளர்கள், 19.26 லட்சம் பேர் ஒரே பெயரில் பல இடங்களில் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். ஹரியானாவில், எட்டு வாக்காளர் களில் ஒருவர் போலியானவர். ஹரியானாவில் உள்ள ராய் ஓட்டுச்சாவடியில், ஒரு போலி வாக்காளர், 22 முறை ஓட்டளித்துள்ளார். இத்தனைக்கும் அவர் இந்தியர் கூட அல்ல; பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் மேத்யூஸ் பெரேரோவின் பெயரில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது’’ என கூறியிருந்தார். தற்போது பிரேசில் மாடல் அழகி பெயரில் ஓட்டு போடப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. இந்நிலையில், ராகுல் குற்றம் சாட்டிய, பிரேசில் மாடல் அழகியின் புகைப்படம் இடம் பெற்றதாக கூறப்படும் வாக்காளர்களில் ஒருவரான பிங்கி ஜூகிந்தர் அளித்த பேட்டி: நான் எந்த தவறும் செய்யவில்லை. வாக்கு திருட்டு ஆதாரமற்றது. தனது வாக்காளர் அடையாள அட்டையில் அச்சுப்பிழை இருக்கிறது. தனது வாக்காளர் அட்டையில் நீண்ட காலமாக புகைப்படம் தவறாக அச்சிடப்பட்டு உள்ளது. நான் எனது வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தபோது, அது முதலில் ஒரு புகைப்படத் தவறாக அச்சிடப்பட்ட நிலையில் வந்தது.

















