கடைசி நாளில் உறுப்பினர்கள் நெகிழ்ச்சி

சென்னை: பிப்ரவரி 21 –
மக்​கள் அங்​கீகரித்​தால் மீண்​டும் சட்​டப்​பேர​வைக்கு வரு​வோம் என 16-வது சட்​டப்​பேர​வை​யின் கடைசி கூட்​டத்​தொடரின் கடைசி நாளில் உறுப்​பினர்​கள் நெகிழ்ச்​சி​யுடன் பேசினர்.தற்​போதைய 16-வது சட்​டப்​பேர​வை​யின் கடைசி கூட்​டத் தொடரின் கடைசி நாளான நேற்றுசட்​டப்​பேரவை கட்சித் தலை​வர்​கள் தங்​கள் 5 ஆண்டு கால சட்​டப்​பேரவை பணி அனுபவங்​களை​ உருக்​க​மாக​வும் நெகிழ்ச்​சி​யுட​னும் பகிர்ந்​து​கொண்​டனர்.செல்​வப்​பெருந்​தகை (காங்​கிரஸ்): தமிழகம் இது​வரை கண்​டி​ராத பல திட்​டங்​களை முதல்​வர் ஸ்டா​லின் செயல்​படுத்​தி​யுள்​ளார். நிதி நெருக்கடியைக் கூட சமாளித்​து, தமிழகத்தை தலை நிமிரச் செய்துள்​ளார். மருது சகோ​தரர்​களாக, தமிழகத்​தில் ஸ்டா​லினும் மத்​தி​யில் ராகுல் காந்​தி​யும் எந்த சமரச​மும் இன்றி மக்​கள் நலனுக்​காக போராடி வரு​கின்​றனர்.
ஜி.கே.மணி (பாமக): தொகுதிக்கு நாங்​கள் கேட்​டதை முதல்​வர் ஸ்டா​லின் கொடுத்​தார். கட்​சி, கொள்கை வேறு​பாடு இன்றி அனை​வரை​யும் அரவணைத்து ஆட்சி நடத்​தி​யுள்​ளார். விவ​சா​யிகளின் கடன், மகளிர் குழு​வினர் கடன் மற்​றும் கல்விக் கடன்களை தள்​ளு​படி செய்​வது குறித்து ஆய்வு செய்ய வேண்​டும்..
சிந்​தனை செல்​வன் (விசிக): அண்​ணா, கருணாநிதி ஆட்​சிக்​காலத்​தில் இல்லாதவகை​யில் தற்​போது உள்ள அதிக நெருக்​கடிகளை இயல்பாக கடந்து வந்துள்​ளார். அரசி​யல், பண்​பாட்டு தளங்​களில் தமிழகத்தை தலைநிமிரச் செய்​துள்​ளார்.
பெ.​நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட்): மிகப்​பெரிய ஜாம்​ப​வான்​கள் அமர்ந்த இந்த சட்​டப்​பேர​வை​யில் பணி​யாற்​றிய​தில் பெரு​மை. இந்​தி​யா​வில் மதச்​சார்​பின்​மையை பாது​காக்​கக்​கூடிய தலை​வர் ஸ்டா​லின். தனது திட்​டங்​கள் மூலம் இந்​திய நாட்​டுக்கே எடுத்​துக்​காட்​டாக திகழ்​கிறார். மக்​கள் அங்​கீகரித்​தால் மீண்​டும் இந்த பேர​வைக்கு வரு​வோம்.டி.​ராமச்​சந்​திரன் (இந்​திய கம்​யூனிஸ்ட்): மகளிர் உரிமைத்​தொகை திட்​டம் சாத்​தி​யமா என்று கேட்​டார்​கள். ஆனால், அதை சாத்​தி​ய​மாக்கி சாதித்​துக்​காட்​டி​யிருக்​கிறார். மத்​திய அரசு ஓரவஞ்​சனை காட்​டி​னாலும் இரட்டை இலக்க பொருளா​தார வளர்ச்​சியை தமிழகம் அடைந்​திருக்​கிறது. ஸ்டாலின் மீண்​டும் முதல்​வர் ஆவார்.சி.சதன் திரு​மலைகு​மார் (மதி​முக): இந்​தி​யா​வில் உள்ள அனைத்து முதல்​வர்​களுக்​கும் முன்​மா​திரி முதல்​வ​ராக திகழ்​கிறார் ஸ்டா​லின். விளம்​புநிலை மக்​களை தூக்​கி​விட வேண்​டும் என்றஎண்​ணம் கொண்​ட​வர்.