கட்டுக்கடங்காத மும்பை வாடகை

மும்பை, மே 27- மும்பையில் வாடகைக்கு ஒரு வீடு தேடுவது, ஒரு சாதாரண சவாலாக இல்லாமல், மிகப்பெரிய நிதிச் சுமையாக மாறி வருகிறது. நாட்டின் நிதி தலைநகரமான மும்பையில் ஒரு வீட்டின் வாடகை, சென்னை, புனே, ஹைதராபாத், பெங்களூரு போன்ற மற்ற பெரிய நகரங்களை விட மூன்று மடங்கு அதிகமாக இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மும்பையின் பிரத்தியேகமான நிலை: மும்பை, இந்தியாவின் நிதி மையம், வணிகத்தின் தலைமையகம் மற்றும் பொழுதுபோக்கின் தலைநகரம். இங்குள்ள பொருளாதார வாய்ப்புகள்,
இந்தியா முழுதும் உள்ள லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கிறது. இது மக்கள் குடியேறுவதற்கான முதன்மைத் தேர்வு நகரமாக விளங்குகிறது. இதனால் செலவுகளும் அதிகரிக்கிறது.
குறிப்பாக வாடகை சந்தையில். இங்கு வாழும் ஒவ்வொரு தனிநபரும் தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை வாடகைக்கே செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது சேமிக்கும் திறனையும், ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தையும் பாதிக்கிறது. மும்பை, அரபிக்கடலால் மூன்று பக்கமும் சூழப்பட்ட ஒரு தீபகற்ப நகரம்.