கணிப்புகளை தாண்டிய ஜி.டி.பி.,; 2வது காலாண்டில் வளர்ச்சி 8.20%:

புதுடில்லி, நவ. 29- கணிப்புகளை எல்லாம் விஞ்சி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இரண்டாவது காலாண்டான, கடந்த ஜூலை – செப்டம்பரில் 8.20 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து தேசிய புள்ளிவிபர அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: * நடப்பு நிதியாண்டின், இரண்டாம் காலாண்டில் ஜி.டி.பி., வளர்ச்சி 8.20 சதவீதம் * கடந்த 6 காலாண்டுகளில் தற்போது அடைந்துள்ள வளர்ச்சி தான் மிக அதிகம் * முந்தைய காலாண்டான ஏப்., – ஜூனில் இது 7.80 சதவீதமாக இருந்தது * கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி 5.60 சதவீதம் மட்டுமே * கணிப்புகளை தாண்டிய இந்த வளர்ச்சியில், நுகர்வோர் செலவழிப்பின் பங்கு 57 சதவீதம் * அமெரிக்க வரிவிதிப்பு அதிகரிப்பு, அதைத் தொடர்ந்த ஜி.எஸ்.டி., குறைப்பு இதில் பிரதிபலித்துள்ளது * அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கத்தை, உள்நாட்டு நுகர்வு கணிசமாக தணித்திருப்பது புள்ளிவிபரத்தில் தெரிந்தது * கடந்த 2024, ஜூலை – செப்., காலாண்டின் தயாரிப்பு துறை வளர்ச்சி 7.20 சதவீதம்; தற்போது அது 9.10 சதவீதம் * சில்லரை விலை பணவீக்கம் 0.25 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், ஜி.டி.பி., வளர்ச்சி அபார உயர்வு * பணவீக்கம் சரிவு, ஜி.டி.பி., உயர்வால், கடன் வட்டியை ரிசர்வ் வங்கி மேலும் குறைக்க வாய்ப்பு ஜி.டி.பி., வளர்ச்சி அதிக ஊக்கமளிக்கிறது. அரசின் வளர்ச்சிக்கு ஆதரவான கொள்கைகள் சீர்திருத்தங்களை பிரதிபலிக்கிறது. – பிரதமர் மோடி பொருளாதார சீர்திருத்தங்கள், நிதி ஒருங்கிணைப்பு, நுகர்வு அதிகரிப்பு ஆகிய குறியீடுகள், ஜி.டி.பி., வளர்ச்சியை வேகப்படுத்தியுள்ளன.- நிர்மலா சீதாராமன்,நிதி அமைச்சர். நடப்பு நிதியாண்டிலேயே இந்திய பொருளாதாரம் 4 ட்ரில்லியன் டாலரை கடக்கும் என்பதை ஜி.டி.பி., வளர்ச்சி காட்டுகிறது. – அனந்த நாகேஸ்வரன், தலைமை பொருளாதார ஆலோசகர்.