Home விளையாட்டு கனடா முதல் வெற்றி

கனடா முதல் வெற்றி

வான்கூவர், ஜூன் 19- உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்து கனடா அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கத்தார் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 6-0 என்ற கோல் கணக்கில் கனடா அபார வெற்றி பெற்றது. அமெரிக்காவின் வான்கூவர் மைதானத்தில் நடைபெற்ற குரூப் பி பிரிவு ஆட்டத்தில் கனடா மற்றும் கத்தார் அணிகள் மோதின. இதற்கு முன்பு விளையாடிய 8 உலகக் கோப்பை போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியிருந்த கனடா அணிக்கு, இந்தப் போட்டி ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நட்சத்திர வீரர் அல்போன்சோ டேவிஸ் இல்லாமல் களமிறங்கிய போதிலும் கனடா வீரர்கள் ஆடுகளத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கைல் லாரின் முதல் கோல் அடித்து கனடாவை முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து ஜொனாதன் டேவிட் தனது அசாத்திய ஆட்டத்தால் அடுத்தடுத்து கோல்களை விளாசி உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் ஹாட்ரிக் சாதனையை படைத்தார். 64வது நிமிடத்தில் நாதன் சலிபாவும் ஒரு அபாரமான ஃபிரீ-கிக் கோல் அடித்தார். கத்தார் டிபெண்டர் முகமது மனாயின் ஓன் கோல் மற்றும் ஜொனாதன் டேவிட்டின் கடைசி நேர கோல் ஆகியவற்றின் மூலம் கனடா 6-0 என்ற கணக்கில் மாபெரும் வெற்றி பெற்றது. கத்தார் அணியின் ஹோம் அகமது 34வது நிமிடத்தில் ரெட் கார்டு பெற்று வெளியேறினார். கோனேவுக்கு பலத்த காயம் கனடாவின் இந்த வரலாற்று வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், அந்த அணியின் 24 வயது நட்சத்திர மிட்பீல்டர் இஸ்மாயில் கோனேவுக்கு ஏற்பட்ட பலத்த காயம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் போது கத்தார் வீரர் மாடிபோ பின்னால் இருந்து முரட்டுத்தனமாக தாக்கியதில் கோனே மைதானத்திலேயே விழுந்து துடித்தார். இதையடுத்து அவர் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.