கனரா வங்கி கேன்டீனில் மாட்டிறைச்சிக்கு தடை

திருவனந்தபுரம், ஆகஸ்ட் 30- கேரளா மாநிலம் கொச்சியில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கேன்டீன் வசதி உள்ளது. இந்நிலையில் தான் பீகாரில் இருந்த வந்த பிராந்திய மேலாளர் கேன்டீன் மற்றும் அலுவலகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தார். இதனால் கோபமான வங்கி ஊழியர்கள் பிராந்திய மேலாளர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து புரோட்டா மற்றும் மாட்டிறைச்சி சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளா மாநிலம் கொச்சியில் கனரா வங்கி உள்ளது. இங்கு கேன்டீன் வசதி இருக்கிறது. வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியர்கள் இந்த கேன்டீனை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் சமீபத்தில் பீகாரை சேர்ந்த ஒருவர் கொச்சி கனரா வங்கியின் பிராந்திய மேலாளராக நியமனம் செய்யப்பட்டார். இவர் ஊழியர்களை கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் அதிருப்தியடைந்தனர். அதுமட்டுமின்றி வங்கி கேன்டீன் மற்றும் அலுவலகத்துக்குள் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தார். இதனால் கொதித்தெழுந்த வங்கி ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கினர். பிராந்திய மேலாளரின் அலுவலகம் முன்பு வங்கி ஊழியர்கள் திரண்டு கேன்டீனில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டதற்கு எதிராக கோஷமிட்டனர். அதுமட்டுமின்றி புரோட்டாவுடன் மாட்டிறைச்சி சேர்த்து சாப்பிட்டனர். Beef திருவிழா போல் அவர்கள் மாட்டிறைச்சியை பகிர்ந்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்திய வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு (Bank Employees Federation of India or BEFI) சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டமைப்பின் தலைவர் எஸ்எஸ் அணில் கூறுகைியல், வங்கியில் சிறிய கேன்டீன் இயங்கி வருகிறது. குறிப்பிட்ட நாட்களில் கேன்டீனில் மாட்டிறைச்சி சமைக்கப்படும். ஆனால் பிராந்திய மேலாளர் கேன்டீன் ஊழியர்களிடம் மாட்டிறைச்சியை சமைக்க கூடாது என்று தடை போட்டுள்ளார்.