கம்பீரின் திடீர் அறிவிப்பு

டெல்லி, அக். 13- இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்தான் அணியைப் பொறுத்தவரை அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் மற்றவர்களுக்கு அங்கு வாய்ஸ் இல்லை என்ற விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அண்மையில் பெட்டியில் அவர் கூறியுள்ளார்.
ஆனால், ரோஹித் சர்மா, விராட் கோலி குறைந்தது இரண்டு ஃபார்மட் ஆடிக்கொண்டிருந்தவர்கள் ஒரு ஃபார்மட் வீரர்களாக மாற்றப்பட்டுள்ளனர். டெஸ்ட்டிலிருந்து ஓய்வு அறிவிக்கும் அளவுக்கு விஷயங்கள் நடந்து விட்டன. ஆனால், கம்பீர் என்னுடை பங்கு ஒன்றுமல்ல என்று கூறி வருகிறார்.
மேற்கு இந்தியத் தீவுகளுடன் டெல்லி டெஸ்ட்டின் போது ஆகாஷ் சோப்ராவுக்கு பேட்டியளித்த கவுதம் கம்பீர் இவ்வாறு கூறினார்: டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்தான். அது அவருடைய டி20 அணி என்னுடையது அல்ல. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு ஷுப்மன் கில் கேப்டன். அது அவருடைய அணி என்னுடையது அல்ல. சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டுக்குரிய கேரக்டர் கொண்டவர்.
களத்திலிருந்தாலும் வெளியே இருந்தாலும் சூர்யகுமார் யாதவ் சுதந்திரமானவர். நம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் விதம் தானே எல்லாம். களத்தில் ஆளுமையாகவும் களத்திற்கு வெளியே ஒரு குணாம்சமுடைய நபராகவும் அவர் இருக்கிறார்.
ஓய்வறை சூழ்நிலையைப் பாருங்கள். கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக அவர் ஓய்வறையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பெரிது. ஆசியக் கோப்பை வெற்றி முதல் முடிவுகளையும் பாருங்கள். ஹை ரிஸ்க் ஹை ரிவார்ட் கிரிக்கெட் அது.நான் சூர்யாவுடன் வைத்துக் கொண்ட முதல் உரையாடலிலேயே நாம் தோல்விப் பயத்தை விட்டொழிப்போம் என்பதே. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக வெற்றியடைந்த பயிற்சியாளர் என்ற பெயருக்காக நான் பணியாற்றவில்லை. மாறாக அச்சமற்ற அணி என்ற நிலையை அடைவதே முக்கியம் என்பதை வலியுறுத்தினேன்.வெற்றிபெற்ற அணியாக இருக்க வேண்டும் என்று ஆட நினைத்தால் அது அணியின் மீது அழுத்தங்களையே அதிகரிக்கும். பெரிய அணிகளுக்கு இடையே ஆடும்போது எவ்வளவு அச்சமற்ற முறையில் ஆடுகிறோமோ அத்தனைக்கத்தனை ரிசல்ட் சாதகமாக இருக்கும். பெரிய போட்டிகளில் தவறுகள் இழைப்பது பற்றி கவலைப்படக் கூடாது. இதைத்தான் ஆசியக் கோப்பையின் போது நாங்கள் உரையாடினோம்.