பெங்களூரு, ஏப். 10- இந்தாண்டு சிக்குன்குனியா நோய் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் தயார் நிலையை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த காலங்களில் 16 வருடங்களாக ஏற்பட்ட தொற்று நோய்களின் சுழற்சியை மேற்கோள் காட்டி இந்த ஆண்டு குறிப்பாக பருவ மழை நெருங்கி வருவதால் தொற்று எண்ணிக்கை யில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என்று அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். தொற்றுநோயை தடுக்க மாவட்ட நிர்வாகங்களும் சுகாதார துறையும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொற்று நோயியல் நிபுணரும் பொது சுகாதார நிபுணருமான டாக்டர் சுனில் குமார் கூறுகையில், கடந்த 16 ஆண்டுகள் சுழற்சியை விளக்கினார். முதலில் சிக்குன் குனியா பாதிப்பு 1963 பதிவானது. 1975-ல் அதிகமான பாதிப்புகளாக தோன்றின. இது 2005ல் மீண்டும் வலுவாக தோன்றியது.
அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருவதை காண்கிறோம்.
இந்த தடவை பார்க்கும் போது ஒரு வடிவத்தை கவனிக்கிறோம்.
ஒவ்வொரு பதினாறு வருடங்களுக்கும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பிற்கும் 2025 அந்த சுழற்சிக்கு பொருந்துகிறது.
எனவே நாம் தயாராக இருக்க வேண்டும். சிக்குன்குனியா பாதிப்புகளை ஏற்படுத்தும் மழைக்காலத்தில், கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கட்டடங்கள் கட்டும் இடத்தில் தண்ணீர் தேக்கமாகும் இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாவது வழக்கமாக உள்ளது.
கர்நாடகத்தில் பல இடங்களில் இந்த சிக்குன் குனியா நோய் பரவுகிறது. இதுவே பல இடங்களில் டெங்கு காய்ச்சலாகவும் தென்படும். இது டெங்கு காய்ச்சலை விட சிக்குன் குனியா குறைவாக இருந்த போதிலும், இந்த நோய் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும். காய்ச்சல், மூட்டு வலி ஒரு மாதம் வரைக்கும் இருக்கலாம்.
அல்லது ஒரு ஆண்டு வரையிலும் கூட நீடிக்கலாம் .நிறைய பேருக்கு இதனால் நடக்க முடியாத நிலைமையும் கஷ்டமும் உருவாகும்.
எனவே, நோய் பரவாமல் தடுக்க எச்சரிக்கையுடன் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றார்.போர்ட்டீஸ் மருத்துவமனையின் உள் மருத்துவ இயக்குனர் டாக்டர் ஷீலா முரளி சக்கரவர்த்தி கூறுகையில்,பகலில் கடிக்கும் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுகிறது நோய் எதிர்ப்பு அமைப்பு ஆன்டிபயாட்டிக் உருவாக்குவதன் மூலம் வைரஸை எதிர்த்து போராடுகிறது.
ஆனால் சில நேரங்களில் இந்த ஆன்ட்டி பாடிகள் தவறாக மூட்டுகளை தாக்குகின்றன. அதுதான் நீண்ட கால வழியை வலியை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்டு சிகிச்சை எதுவுமில்லை எனவே
தடுப்பு நடவடிக்கை மிக முக்கியமானது.
கொசு கடித்தலை தவிர்த்து தேங்கி நிற்கும் தண்ணீரை துடைத்தெடுக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல் கவனிக்க வேண்டும்.
கொசுக்கள் உற்பத்தியாகாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் படி ஜனவரி 1 முதல் இதுவரை கர்நாடகாவில் 245 பேருக்கு சிக்கன் குனியா பாதித்ததாக பதிவாகியுள்ளன. இதன் திட்ட இயக்குனர் அம்சார் அஹமது கூறுகையில், நாங்கள் ஆரம்ப நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருகிறோம்.
கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது மேலும் தீவிர முயற்சிகள் மூலம் இதன் எண்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.