
பெங்களூரு, ஏப்ரல் 1-
மின்சார விநியோக நிறுவனங்களின் (எஸ்காம்ஸ்) இழப்புகளை ஈடுசெய்வதற்காக, கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், மாநிலத்தில் உள்ள வணிக மற்றும் தொழில்துறை மின்சாரப் பயனாளர்களுக்கான திருத்தப்பட்ட கட்டணம், புதிய நிதியாண்டின் தொடக்கமான இன்றே அமலுக்கு வருகிறது. இந்தக் கட்டண உயர்வு 2025-26 நிதியாண்டிற்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பயனாளர்கள் இனி ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கூடுதல் பணம் செலுத்த வேண்டும். இந்த நிலுவைத் தொகையை, பெஸ்காம் உட்பட அனைத்து மின்சார நிறுவனங்களும் 2026-27 நிதியாண்டிற்கான கட்டணப் பட்டியல்களில் வசூலிக்கும்.
தொழில் நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள், சினிமா அரங்குகள் போன்ற வணிக வளாகங்களுக்கு அதிகபட்ச கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. இது உற்பத்திச் செலவுகள் மற்றும் சேவைக் கட்டணங்களைப் பாதிக்கக்கூடும். சமீபத்திய அறிக்கைகளின்படி, மாநிலத்தின் மின்சார நுகர்வு வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது.
பெங்களூருவில் அதிக மின்சாரம் நுகரப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த மாதம் மாநிலத்தின் மொத்த மின்சார நுகர்வு 373.6 மில்லியன் யூனிட்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சிறிய மாநிலம் பயன்படுத்தும் மின்சாரத்தை பெங்களூரு நகரம் மட்டுமே பயன்படுத்துகிறது என்ற ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவின் உச்சபட்ச தேவை 2,000 முதல் 2,500 மெகாவாட் வரை எட்டியுள்ளது. பெங்களூருவில் அதிக மின்சாரம் நுகரப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த மாதம் மாநிலத்தின் மொத்த மின்சார நுகர்வு 373.6 மில்லியன் யூனிட்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சிறிய மாநிலம் பயன்படுத்தும் மின்சாரத்தை பெங்களூரு நகரம் மட்டுமே பயன்படுத்துகிறது என்ற ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவின் உச்சபட்ச தேவை 2,000 முதல் 2,500 மெகாவாட் வரை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

















